ஆந்திர மாநிலத்தில் பழங்குடியினர் பகுதியில் வசிக்கும் பெண்கள் பகலில் நைட்டி அணிந்தால் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்ற கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளது. அதுமட்டுமின்றி, பகலில் நைட்டி அணிபவர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் சன்மானமும் வழங்கபடுகிறது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது தோகலபள்ளி என்ற கிராமம். வட்டி என்றழைக்கப்படும் மலைவாழ் மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் பெண்கள் பகலில் நைட்டி அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. வ்ட்டி இனத்தை சேர்ந்த 9பேர் தலைவர்களாக கிராம மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தான் பெண்கள் நைட்டி அணிய தடை விதித்துள்ளனர்.
கிராமத்தில் வசிக்கும் பெண்கள் காலை 7மணி முதல் இரவு 7 மணி வரை நைட்டி அணியக் கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு ரூ.2000 அபராதமும் வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, பெண்கள் நைட்டி அணிகிறார்களா என்பதை கவனித்து தகவல் அளிக்கும் நபர்களுக்கு ஆயிரம் ரூபாய் சன்மானமும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
கிராமத் தலைவர்களின் கட்டுப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த சில பெண்கள் அரசு அதிகாரிகளிடம் முறையிட்டதாக கூறப்படுகிறது. அதனால் கிராமத்திற்கு வந்த அதிகாரிகள் விசாரித்ததில் அப்படி எந்த கட்டுப்பாடும் இல்லை என அங்கிருந்த பெண்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.