லூரு

ந்திர மாநிலம் ஏலூரு நகரில் நேற்று ஒரே நாளில் மர்மக் காயச்சலால் 292 பேர் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிர் இழந்துள்ளார்.

நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் அதிக அளவில் உள்ள நிலையில் ஆந்திர மாநிலத்தில் புதியதாக ஒரு மர்மக் காய்ச்சல் பரவத் தொடங்கி உள்ளது.  அந்திர மநிலம்க் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த ஏலூரு நகரில் 45 வயதான ஒருவர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக நேற்று அனுமதிக்கப்பட்டார்,.  அவருக்கு வாந்தி மற்றும் வலிப்பு உண்டாகி மாலை மரணம் அடைந்தார்.

அவரைத் தொடர்ந்து பலர் இதே நோய்க்காக மருத்துவமனையில் சேர்ந்தனர்.  இவர்களில் பலர் ஒரு சில நிமிடங்களுக்குள் குணம் அடைந்தனர்.  ஆனால் இதே அறிகுறிகளுடன் வந்த 7 பேர் உடல் நிலை மோசமாகி விஜயவாடா நகர மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த நோயால் இதுவரை 292 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  இவர்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது சோதனையில் தெரிய வந்துள்ளது.  இந்த நோய் குறித்து சோதனைகள் நடைபெற்றுள்ளன.   அந்த பகுதியில் உள்ள  பால் உள்ளிட்ட உணவுப் பொருட்களும் சோதிக்கப்பட்டன.    இந்த சோதனை முடிவுகள் இதுவரை வரவில்லை.

இந்த செய்தி மாநிலம் எங்கும் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   இது குறித்து மாவட்ட இணை ஆட்சியர் ஹிமன்ஷு சுக்லா இந்த சோதனைகளின் முடிவு கிடைத்த பிறகே இது குறித்து எதுவும் சொல்ல முடியும் என தெரிவித்துள்ளார்.  இதையொட்டி ஆந்திர முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி இன்று ஏலூரு நகருக்கு வர உள்ளார்.   மாநிலத்தில் பல பகுதிகளில் இருந்தும் மருத்துவர் குழு ஏலூருக்கு சென்றுளது.

இந்த நோயை குறித்து அந்த பகுதி பாஜக எம் பி நரசிம்ம ராவ் உள்ளிட்ட  பலரும் மாநில தலைமை செயலரிடம் விசாரித்துள்ளனர்.  நரசிம்ம ராவ் டில்லி எய்ம்|ஸ் மருத்துவமனை இயக்குநரிடம் பேசி ஐந்து மருத்துவர்கள் கொண்ட குழுவை ஏலூருக்கு அனுப்ப கோரிக்கை விடுத்து அவர்கள் இன்று வர உள்ளனர்.  ஆந்திர அளுநர் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர்களிடம் கூறி உள்ளார்.