ஜம்மு-காஷ்மீர்:
ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை நிவாரண உதவி வழங்க உள்ளதாக ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே முதல் முறையாக இவ்வளவு அதிகமான நிவாரண தொகை வழங்கிய மாநிலமாக ஜம்மு காஷ்மீர் மாறியுள்ளது.
கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளதால், ஜம்மு காஷ்மீர் வழக்கறிஞர்களின் வாழ்வதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு குறைந்த பட்ச பொருளாதார உதவிகள் வழங்கும் வகையில், ஒரு கோடி ரூபாய்கான காசோலையை, லெப்டினன்ட் கவர்னர் கிரிஷ் சந்திர முர்மு, ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற ரிஜிஸ்டர் ஜாவாட் அஹமத் விடம் ஒப்படைத்தார்.
இந்த நிகழ்வின் போது, ஜம்மு காஷ்மீர் பார் அசோசியசன் தலைவர் அபிணவ் சர்மா மற்றும் செயலாளர் முரமு ஆகியோர் உடனிருந்தனர் என்று அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் பேசும் போது, பல்வேேறு துறைகளுக்கு நிவாரண உதவிகள் வழங்க முடிவு செய்த ஜம்மு அரசு செய்தது. இதில், பதிவு செய்யப்பட்ட கட்டிட தொழிலாளர்கள், MGNREGA கார்டு வைத்துள்ளவர்கள், மற்றும் பென்சன் ஸ்கீம் மூலம் பயன் பெறுபவர்கள் ஆகியோர் இதன் மூலம் பயன் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது