வந்தே மாதரம் மீட்பு நடவடிக்கையில் முதல் இனைந்தது இண்டிகோ….

Must read

புது டெல்லி:

ந்தே மாதரம் மீட்பு நடவடிக்கையில் முதல் தனியார் விமான நிறுவனமாக இண்டிகோ விமான நிறுவனம் இணைந்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க இந்திய அரசு வந்தே மாதரம் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை, ஏர் இந்தியா விமானம் மூலம் சொந்த நாடுக்கு அழைத்து வருகிறது. இந்நிலையில், இந்த வந்தே மாதரம் மீட்பு திட்டதில் முதல் முறையாக தனியார் விமான நிறுவனமான இண்டிகோ விமான நிறுவனம் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இண்டிகோ நிறுவனத்திற்கு மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கி தவிக்கும் கேரள மக்களை இந்தியா கொண்டு வர 97 விமானங்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துளளது. மேலும், அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின் படி, சவுதி அரேபியாவின் தோஹா, குவைத் மற்றும் மஸ்கட் ஆகிய இடங்களுக்கு விமானங்களை அனுப்பி அங்கு சிக்கியுள்ள கேரளவை சேர்ந்தவர்களை அழைத்து வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் இந்தியர்களில் பாதிக்கும் மேற்பட்ட அதாவது 180-க்கும் மேற்பட்ட இந்தியர்களை அழைத்து வர இண்டிகோ நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேசிய அளவிலான ஊரடங்கு காரணமாக, வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் 1.9 லட்சம் இந்தியர்களை, தாய்நாட்டுக்கு அழைத்து வரும் வந்தே மாதரம் மீட்பு பணியை இந்த அரசு துவக்கியது. இதுவரை இந்த மீட்பு பணியின் இரண்டாம் கட்டதை எட்டியுள்ளது.

இதுவரை ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான ஆகிய விமானங்களே இந்த பணியில் ஈடுபட்டிருந்தன. முதல் கட்டமாக 64 விமானங்களும், இரண்டாம் கட்டமாக 149 விமானங்களும் இயக்கப்பட்டன.

முன்னதாக மே 21 அன்று, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இந்த விமானங்கள் இதுவரை 20,000 இந்தியர்களை திரும்ப அழைத்து வந்ததாக குறிப்பிட்டிருந்தன.

இதுகுறித்து இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி ரோனோஜோய் தத்தா வெளியிட்ட அறிக்கையில், மத்திய கிழக்கிலிருந்து இந்தியா திரும்பு மக்களை ஏறி வருவதால், மத்திய கிழக்கில் எங்கள் நெட்வொர்க் வலிமையை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இண்டிகோ விமான அனுப்பு 97 விமானங்களில், சவுதி அரேபியாவிலிருந்து 36, தோஹாவிலிருந்து 28, குவைத்திலிருந்து 23 மற்றும் மஸ்கட்டில் இருந்து கேரளாவுக்கு 10 விமானங்கள் பறக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

More articles

Latest article