ஜெர்மனி

ன்னும் 4 முதல் 6 ஆண்டுகளில் செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டம் சாத்தியமாகும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கலன்களை உருவாக்கி வருவதில் மிகவும் புகழ் பெற்று வருகிறது.   பல நாடுகள் தங்கள் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இந்த நிறுவனம் உதவி புரிந்துள்ளது.  இந்நிறுவனத்தை நிறுவியவர் எலான் மஸ்க் ஆவார்.

இவர் சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த விருது வழ்ங்கும் விழாவில் பங்கேற்றுள்ளார்.  அப்போது எலான் மஸ்க் தனது உரையில், “26 மாதங்களுக்கு ஒருமுறை பூமியும் செவ்வாய் கிரகமும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன.  இது சுற்று வட்டப்பாதை அடிப்படையில் நிகழ்வதாகும்.

இந்த நிகழ்வை கருத்தில் கொண்டு அடுத்த 2 ஆண்டுகளில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது ஆளில்லா விண்கலத்தை செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்ப உள்ளது.  மேலும் இன்னும் 4 அல்லது 6 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதன் செல்வதும் சாத்தியமாகலாம்” எனத் தெரிவித்துள்ளார்.