சென்னை

டந்த 3 வருடங்களில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 100% அதிகரித்துள்ளது.

பல மாணவர்கள் வறுமையின் காரணமாகப் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர்.    இதைத் தவிர படிப்பில் நாட்டமின்மை காரணமாக வெகு சிலர் பள்ளியில் இருந்து விலகுகின்றனர்.    இவ்வாறு பள்ளிப்படிப்பின் இறுதிக் கட்டமான 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் இருந்து விலகுபவர்கள் எண்ணிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேள்வி கேட்டிருந்தனர்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பி பி சவுத்ரி மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த துகாராம் ஆகியோரின் கேள்விக்கு மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் விடை அளித்தார்.   அந்த பதிலில்  ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மற்றும் கர்நாடகாவில் பள்ளிப் படிப்பில் கல்வியை நிறுத்துபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தில் கடந்த 2015-16வருடம் 8% இருந்த மாணவர்கள் எண்ணிக்கை 2017-18 அதாவது மூன்றே வருடங்களில் 16.2% அதிகரித்துள்ளது.   இது 100%க்கும் அதிகமாகும்.   ஐந்தாம் வகுப்பு வரை கல்வியை நிறுத்தும் மாணவர்கள் 5.9% உள்ளனர்.  தமிழகம்  கல்வியில் மிகவும் முன்னேறி உள்ளதாகக் கூறப்படும் வேளையில் இது போன்ற தகவல்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இதற்கு வறுமையும் பொருளாதாரமும் முக்கிய காரணம் என அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் உடல்நலக் குறைவு, உடல் ஊனம், குடும்ப சூழ்நிலையால் பெற்றோர்கள் கல்வி அளிப்பதை நிறுத்துதல்  ஆகியவையும் காரணங்களாக உள்ளன.    இவர்களில் பலர் மீண்டும் வழக்கமான பள்ளிக் கல்விக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகா ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக குழந்தைகள் உரிமை ஆர்வலர் “தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களை பெயில் ஆக்குவது இல்லை.   ஆனால் ஒன்பதாம் வகுப்பு முதல் பொதுத் தேர்வு பயத்தினால் மணவரக்ள் பள்ளிப்படிப்பை நிறுத்தி விடுகின்றனர்.  எனவே  ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் திறனை அடிக்கடி கவனித்து முன்னேற்ற வேண்டும்.   கல்வி கற்கும் உரிமைக்கான வயது வரம்பை 14லிருந்து 18 ஆக உயர்த்த வேண்டும்.: எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக தலைமை ஆசிரியர் சங்கத் தலைவர் பீட்டர் ராஜா,  “வழக்கமான  கல்வி கற்பதில் ஆர்வம் இல்லாத மாணவர்களுக்கு தொழில் கல்வி கற்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.   ஆரம்பக் கல்வி நிலையிலேயே மாணவர்கள் படிப்பை நிறுத்துவதை தடுக்க ஆவன செய்ய வேண்டும்.  அதற்காக 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களின் வருகையை ஆய்வு செய்து ஒரு மாதத்துக்கும் மேலாகப் பள்ளிக்கு வராத மாணவர்களின் வீடுகளுக்கு ஆசிரியர்கள் சென்றுவிஆரணைஅஎய்ய வேண்டும்.    மாணவர்கள் பள்ளிப் பருவத்தில் படிப்பை நிறுத்துவது மிகவும் தவறானது” எனக் கூறி உள்ளார்.