கொல்கத்தா
இன்னும் 3 வருடங்களில் வங்கிகளில் மேலும் ரூ. 2.54 லட்சம் கோடி வாராக்கடன் உருவாகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வங்கிகளில் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் கடன் வாங்கி செலுத்தாமல் உள்ளன. வெகுநாட்களாக இவ்வாறு வசூலாகாத கடன்கள் வாராக்கடன்கள் என அழைக்கப்படுகின்றன. இந்தக் கடன்களால் வங்கிக்கு எவ்வித லாபமும் இல்லை என்பதால் இவற்றை வங்கிகளில் கணக்கில் காட்டப்படுவது கிடையாது.
ஒரு கால கட்டத்துக்குப் பிறகு கடனுக்கு ஈடாக அளிக்கப்பட்ட சொத்துக்களை விற்று வங்கிகள் தனது பணத்தை எடுத்துக் கொள்வது வழக்கமாகும். ஆனால் பெரும்பாலான சமயங்களில் இந்த ஈடாக அளிக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு வங்கிக்கு வர வேண்டிய தொகையை விட குறைவாகவே இருப்பதால் வங்கிக்கு இழப்பு ஏற்படுகிறது.
இந்த வாராக்கடன்கள் குறித்து கொல்கத்தாவைச் சேர்ந்த இந்தியன் ரேட்டிங் அண்ட் ரிசர்சி என்னும் நிறுவனம் ஒரு ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில் 500 பெரிய தனியார் நிறுவனங்களின் கடன்கள் மற்றும் அவை அளித்து வரும் தொகைகள் ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் ரூ.10.5 லட்சம் மதிப்பில் உள்ள கடன்களில் மிகவும் குறைவான தொகைகள் திரும்ப செலுத்தபட்டுளன.
இந்த 500 வாடிக்கையாளர்கள் மொத்தம் ரூ.39.28 லட்சம் கோடி கடன் செலுத்த வேண்டியுள்ளது. இதில் ரூ.7.35 லட்சம் கோடி கடன் தொகை செலுத்தப்படாமல் உள்ளது. இந்த நிறுவனங்கள் திருப்பிச் செலுத்தி வரும் தொகைகளை ஆய்வு செய்த போது இன்னும் மூன்று வருடங்களில் இந்த தொகையில் ரூ.2.54 லட்சம் வாராக்கடன்களாக உரு மாறும் எனத் தெரிய வந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் இந்த நிறுவனங்கள் தங்கள் கடன் தொகைகளை உற்பத்தி செலவுக்காக வாங்கி உள்ளன. தற்போது ஜிடிபி மிகவும் குறைந்து வருகின்றது. வரும் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இந்த உற்பத்தி சதவிகிதம் நான்காகத் தொடரும் நிலை உள்ளது.
எனவே வாராக்கடன்கள் இந்த அளவுக்கு உயரலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு வேளை உற்பத்தி 7% ஆனாலும் இந்த வாராக்கடன்கள் ரூ. 1.98 லட்சம் கோடி அளவுக்கு இருக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியப் பொருளாதாரம் இந்த ஆண்டு 4.7% மற்றும் அடுத்த ஆண்டு 5.5 உயரும் என்னும் அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு நடந்துள்ளது.