குஜராத் : இரண்டாம் முறையாக ஓடிப் போன சம்பந்திகள்

Must read

சூரத்

பிள்ளைகள் திருமணத்தின்போது ஓடிப் போன பெண்ணின் அம்மாவும் மாப்பிள்ளையின் அப்பாவும் இரண்டாம் முறையாக மீண்டும் ஓடிப் போய் விட்டனர்.

விக்ரம் – த்ரிஷா நடித்த சாமி திரைப்படத்தில் ‘கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா’ என்னும் பாடல் மிகவும் பிரபலமானதாகும்.   ஆனால் சூரத் நகரில் மணப்பெண்ணின் தாயும் மாப்பிள்ளையின் தந்தையும் மகன் மற்றும் மகளின் திருமணத்தின் போது கடந்த மாதம் வீட்டை விட்டு ஓடி விட்டனர்.   இது குறித்த விவரங்கள் அப்போது வலைத் தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வைரலாகியது.

சூரத் நகரை சேர்ந்த ஹிம்மத் பாண்டவ் என்னும் 46 வயது ஆணின் மகனுக்கும் ஷோபனா ராவல் என்னும் 43 வயதுப் பெண்ணின் மகளுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.   இருவரும் முன்னாள் காதலர்கள் ஆவார்கள்.  அவர்கள் இடையே மீண்டும் கெமிஸ்டிரி வேலை செய்யத் தொடங்கியதால் சென்ற மாதம் வீட்டை விட்டு ஓடி விட்டனர்.  நடக்க இருந்த திருமணம் நின்றது.

அதன் பிறகு இருவரையும் காவல்துறையினர் தேடிக் கண்டு பிடித்தனர்.   இந்த அமர்க்களம் ஓரளவுக்கு முடிவுக்கு வந்து நின்று போன திருமணம் மீண்டும் நடைபெற இருந்த நிலையில் நேற்று முன் தினம் மீண்டும் இந்த முதிய ஜோடிகள் வீட்டை விட்டு ஓடி உள்ளனர்.  அவர்கள் சூரத் நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கி உள்ளதாகவும் இம்முறை காவல்துறையில் புகார் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

படம் : கூகுள்

More articles

Latest article