டில்லி
மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி 2018-19ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அளித்து வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் பின் வருமாறு :
விவசாயிகளுக்கு உதவும் வகையில் பல நல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய சந்தைகள் அமைக்க ரூ. 2000 கோடியில் விவசாய சந்தை உருவக்கப்படும்
விவசாய உள்கட்டமைப்புக்கு ரூ. 22000 கோடி ஒதுக்கீடு
விவசாய கடன் இலக்கு ரூ.11 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்
ரூ,. 1209 கோடி மூங்கில் வளர்ப்புக்கு ஒதுக்கீடு
விவசாய வருமானம் 1.5 மடங்கு உயர நடவடிக்கை எடுக்கப்படும்
மீன்வளம் மற்றும் கால்நடைத்துறைக்கு ரூ. 10000 கோடி ஒதுக்கீடு
4 கோடி கிராமப்புற வீடுகளுக்கு இலவச மின்சார இணைப்பு
2018-19ல் 1 கோடி புதிய வீடுகள் கட்டித்தரப்படும்
கிராமப்புற வேலைவாய்ப்புக்கு ரூ. 14.34 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
8 கோடி பெண்களுக்கு புதிய இலவச எரிவாயு இணைப்பு
2022 க்குள் அனைவருக்கும் சொந்த வீடு
அடுத்த ஆண்டில் 2 கோடி கழிவறைகள் கட்டப்படும்
ஜி எஸ் டி வரிமுறை எளிதாக்கப்படும்
1000 பி டெக் மாணவர்களுக்கு பி எச் டி படிக்க உதவி
மூன்று பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்
பழங்குடி மக்கள் கல்விக்கு தனித் திட்டம் அமைக்கப்படும்
காச நோயால் பாதிக்கப்பட்டோருக்கு நிதி உதவி மாதம் ரூ. 500
10 கோடி மக்களுக்கு ரூ. 5 லட்சம் மருத்துவக் காப்பீடு திட்டம்
நாடெங்கும் 5 லட்சம் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்
24 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்
முத்ரா கடன் திட்டம் மேலும் விரிவாக்கம் – பெண்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் விசேஷ ஒதுக்கீடு – 76% பெண்களுக்கு வழங்கப்படும் (ரூ. 3 லட்சம் கோடி)
வருங்கால வைப்பு நிதியில் முதல் 3 ஆண்டுகளுக்கு பெண்கள் 8% செலுத்தினால் போதும்
மாற்றுத்திறனாளிகளுக்கும் பெண்களுக்கும் மேலும் நலத்திட்டங்கள்
கிராமப்புற பள்ளிகளில் கரும்பலகைக்கு பதில் டிஜிட்டல் பலகை அமைக்கப்படும்
கிராமப்புற சுகாதார வசதிக்கு 16713 கோடி ஒதுக்கீடு
ஸ்மார்ட் சிடி அமைக்க ரூ. 2.04 லட்சம் கோடி ஒதுக்கீடு
ஜவுளித்துறை முன்னேற்றத்துக்கு 7140 கோடி ஒதுக்கீடு
9000 கிமீ புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்
கங்கை நதியை தூய்மையாக்க 187 புதிய திட்டங்கள்
சுங்கச்சாவடியில் மின்னணு பரிமாற்றம் அறிமுகப் படுத்தப் படும்
டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு ரூ. 3,073 கோடி ஒதுக்கீடு
தற்போதுள்ள 124 விமான நிலையங்கள் ஐந்து மடங்காக உயர்த்தப்படும்
கிராமங்களில் 5 லட்சம் வை ஃபை மையங்கள் அமைக்கப்படும்
அரசு நிறுவனங்களின் பங்கு விறபனை மூலம் ரூ. 80 கோடி வருமானம் திரட்ட திட்டம்
அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் ஆதார் போன்று புது அடையாள அட்டை
இரண்டு ராணுவ தளவாட தொழிற்சாலைகள் அமைக்கப்படும்
குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு ஊதிய உயர்வு
பிட் காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகளை ஒழிக்க திட்டம்
வரும் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை 3.3% ஆக இருக்கும்
விலை வாசி க்கு ஏற்றபடி பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் உயரும்
ஆண்டுக்கு ரூ. 250 கோடிக்கு வரை வரவு செலவு உள்ள நிறுவனங்களுக்கு 5 % கார்பொரேட் வரி குறைப்பு (30% இருந்தது இப்போது 25%)
தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றமில்லை
தற்போதுள்ள தனிநபர் வருமான வரி உச்ச வரம்பான ரூ. 2.5 லட்சம் தொடர்கிறது
முதியோருக்கான மருத்துவச் செலவு, மற்றும் மருத்துவக் காப்பீடுக்கு வரி விலக்கு
மூத்த குடிமக்கள் வரி வருமானத்தில் ரூ. 50000 வரை வரி விலக்கு
தனிநபர் வருமானத்தில் ரு. 40000 நிரந்தரக் கழிவு
குடியரசுத்தலைவருக்கான ஊதிய உயர்வு விவரங்கள் :
குடியரசுத்தலைவர்- 5 லட்சம், துணைக் குடியரசுத்தலைவர்- 4 லட்சம், ஆளுநர்கள்- 3.5 லட்சம் ஆக ஊதியம் உயர்வு
இறக்குமதி செய்யப்படும் மொபைல் ஃபோனுக்கு சுங்கத் தீர்வை அதிகரிப்பு