கணிதம் செய்வதற்கு குழந்தைகள் விரல்களைப் பயன்படுத்த வேண்டியது அவசியம் .அது மூளையை பலப்படுத்தும்.
கிட்டத்தட்ட அனைத்து குழந்தைகளும் தங்கள் விரல்களைப் பயன்படுத்தி எண்ணுவதற்கு தெரிந்து கொள்கின்றனர். ஆனால் குழந்தைகள் வளர வளர, கணித சிக்கல்களும் முன்னேற்றம் அடைய, விரல்களை உபயோகப்படுத்தி எண்ணுவதை ஊக்கப்படுத்துவதில்லை அல்லது அது ஒரு குறைவான அறிவார்ந்த யோசிக்கும் வழியாகக் கருதப்படுகிறது. எனினும், குழந்தைகள் விரல்களைப் பயன்படுத்துவதைக் குறை கூறும் கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஒரு பெரிய வாய்ப்பைக் குறைத்து கொள்கின்றனர்.
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியரான ஜோ போலர் “தி அட்லான்டிக்” என்னும் புத்தகத்தில், விரல்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நரம்பியல் நன்மைகள் பற்றியும் அது உயர் கணிதத்தில் மேம்பட்ட சிந்தனைக்கு எப்படி பங்களிக்க முடியும் என்பது பற்றியும் எழுதியுள்ளார்.
புதிய மூளை ஆராய்ச்சியின் படி, குழந்தைகள் விரல்களைப் பயன்படுத்துவதை நிறுத்தினால் அது அவர்களது கணித வளர்ச்சி நிறுத்துவதற்கு ஒத்ததாகும். விரல்கள் தான் ஒருவேளை நம்முடைய மிகப் பயனுள்ள காட்சி உதவுகோலில் ஒன்றாகும், நம் மூளை விரல் பகுதி முதிர்ந்தவராகும்போது நன்கு பயன்படுகிறது. விரல்களின் தேவை மற்றும் முக்கியத்துவத்தின் கருத்து கூட, இசைக் கருவிப் பற்றி அறியாத மக்களைவிட பியானோ, மற்றும் பிற இசை கலைஞர்கள், பெரும்பாலும் கணிதத்தை அதிக புரிந்து கொள்வதற்கு ஒரு காரணமாக இருக்க முடியும்.
போலர் அவர்கள் காட்சி சிந்தனை, எண்ணறிவு, வளர்ச்சி மனப்போக்கை பயன்படுத்துவதன் மூலம் கணிதத்தை கற்பிக்க இன்னும் அதிகமாக ஈர்க்கும் வகையில் ஆராய்ச்சி மற்றும் பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ளார்.
அவரது திட்டம், யூக்யூப்ட் என்னும் அவரது திட்டம், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பல தடைகளைத் தாண்டிக் கணிதத்தைக் கற்றுக்கொள்ள உதவுகிறது. கணிதப் பதட்டம் தான் கணிதத்தைக் கற்றுக்கொள்ள ஒரு இடையூறாக உள்ளதென்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. கணித எப்படி இந்தச் சமத்துவமின்மையை கவனித்து, கணிதம் எப்படி கற்றுத்தரப்படுகிறது என்று மறுசிந்தனை செய்து, போலர் மாணவர்களும் பெரியவர்களும் கணிதத்தின் மேல் விருப்பத்தை வளர்த்துக் கொள்ள ஒரு பரந்த பாதையை உருவாக்கித் தந்துள்ளார்
மாணவர்கள் வகுப்பறைகளில் சாராம்சம் மற்றும் எண்களின் உலகில் மூழ்கும் போது அவர்கள் அடிக்கடி கணிதத்தை அணுக முடியாத ஒன்று எனவும் சுவையற்றதெனவும் நினைப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. கொள்கை உத்தரவுகளினாலும் தவறான பாடத்திட்ட வழிகாட்டிகளினாலும் மாணவர்கள் கணித உண்மைகளை மனனம் செய்ய வேண்டியுள்ளது, மற்றும் எண்களின் பணித்தாள்(work sheet) எழுத வேண்டியுள்ளது, கணிதத்தின் சில காட்சி அல்லது படைப்பு பிரதிநிதித்துவங்கள் மூலம் கற்க வேண்டியுள்ளது.
மழலையர் பள்ளி முதன் எட்டாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள், முந்தைய கற்றல் வரையறைகளை விடக் காட்சி வேலைகளில் அதிக கவனம் செலுத்துகிறது, ஆனால் அவர்களின் உயர் கல்விப் பாடத்திட்டம் ஆசிரியர்களை எண்களாகவும் வெற்றெண்ணமாகவும் யோசிக்க செய்கிறது.
குறிப்பாக விளையாட்டின் மூலம் எண்ணக் கற்றுக்கொளவதன் அவசியம் உணர்ந்து அவர்கள் பல விளையாட்டிகளை உருவாக்கியுள்ளனர்.
அதில், நமது பண்டைய விளையாட்டான “பள்ளாங்குழி” ஆட்டமும் அடங்கும்.
உங்கள் அலைபேசி அல்லது கணினியின் திரையில் விளையாட இங்கே சொடுக்கவும் .
நமது பண்டைய விளையாட்டுகளான பள்ளாங்குழி மற்றும் கிட்டிப் புல் ஆகிய ஆட்டங்கள் எண்ணும் திறனை அதிகரிக்கச் செய்தவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது நாம் அல்லது நம் குழந்தைகள் சப்வே சர்ஃபர் மற்றும் டெம்பிள் ரன் விளையாடுவதை பெருமையாய் சொல்லிக்கொள்கின்றோம்.