தஞ்சாவூர் :
புதிய கல்விக்கொள்கையில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று மத்திய கல்வித் துறை திறன் மேம்பாடு அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த 36வது பட்டமளிப்பு விழாவில் அவர், புதிய கல்விக் கொள்கை அனைத்து உள்ளூர் மொழிகளையும் அடிப்படையாக கொண்டது. குறிப்பாக தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றார்.