விழுப்புரம்:

‘‘371-வது அரசியல் சாசன பிரிவு தமிழகத்துக்கு கிடைத்தால் மத்திய அரசு எதிலும் தலையிட முடியாது’’ என்று தருமபுரி எம்.பி.யும், பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் கூறினார்.

இடஒதுக்கீடு போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் பலியான தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு விழுப்புரம் அருகே ஜானகிபுரத்தில் சமூக நீதி மாநாடு பாமக சார்பில் இன்று நடந்தது.

இதில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ‘‘ தமிழகத்தின் சீரான வளர்ச்சிக்கு 371-வது அரசியல் சாசன பிரிவு அவசியம். இந்த பிரிவு தமிழகத்துக்கு இருந்தால் நீட் தேர்வில் நமது மாணவர்களுக்கு கிடைத்திருக்கும். தமிழகத்துக்கு வசதியாக அரசியல் சாசனத்தில் 371-வது பிரிவில் திருத்தம் தேவை.

371-வது அரசியல் சாசன பாதுகாப்பு பெற்ற மாநிலங்களில் மத்திய அரசு தலையிட முடியாது. இதன் மூலம் தமிழகத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். மகாராஷ்டிரா, ஆந்திரா, குஜராத், நாகாலாந்து மாநிலங்களில் 371-வது பிரிவு அமலில் உள்ளது’’ என்றார்.