நெட்டிசன்

அன்பழகன். V முகநூல் பதிவு…

அத்தனை அரசியல்வாதிகளும் உடனடியாக ஊடகத்தை சந்தித்து பேட்டி அளிக்கும் முறையை உடனடியாக நிறுத்த வேண்டும், குறிப்பாக செகரெட்டேரியட்டில் உள்ள பிரஸ் ரூமில் குவிந்திருக்கும் செய்தியாளர்களை இனி அங்கு கூட்டமாக கூட வேண்டாம் என அறிவுறுத்த வேண்டும்.

பேட்டியில் பேச வேண்டியதை ஒரு வீடியோவாக பதிந்து ஊடகங்களுக்கும் அனுப்பலாம், அல்லது நேரடியாக வீடியோ கான்பரசிங் முறையை அமுல்படுத்தலாம். இன்னும் கூடுதலாக வழக்கம்போல நடைமுறையில் இருக்கும் அறிக்கைகளை தொடர்ந்து அனுப்பலாம் ,

செய்தி சேனல்களும் தாங்கள் இருக்கும் இடங்களிலிருந்தே மேற்சொன்ன வழிமுறைகளில் செய்திகளை வாங்கி குறைந்தபட்ச ஆட்களைக்கொண்டு சேனல்களை நடத்தலாம்,

முடிந்தால் 24 மணி நேர சேனல்களை அனைத்தையும் தற்காலிகமாக முன்னிரவு 10 அல்லது 11 மணி வரை மட்டுமே ஒளிபரப்பு செய்யுமாறு அரசே வலியுறுத்தி ஒரு சுற்றறிக்கை அனுப்பலாம்…

இதனால் செய்திகளை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற அழுத்தம் ஊடகவியலாளர்களுக்கு குறையும்.

செய்வீர்களா, நீங்கள் செய்வீர்களா?!

மற்றொரு பதிவில்,

முழுமையாக மூடச்சொல்ல ஏன் இவர்களுக்கு திராணியில்லை…அட்வைஸ் எதற்கு?! என்று மத்தியஅரசின் ஒளி/ஒலிபரப்புத்துறையின் அறிக்கையை சாடியுள்ளார்.