தூத்துக்குடி: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட உடன்குடி ‘சல்மா பள்ளி’ நிர்வாகிகளுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் உடனடி ஜாமின்  வழங்கி உள்ளது. இது நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாகி உள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களுக்கு உடனடி நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் தற்போது நீதிமன்றமும் உடனடி ஜாமின் வழங்கி உள்ளது.

பள்ளியில்  மாணவர்களிடையே ஆன்மிக சொற்பொழிவாற்றிய நபருக்கு ஜாமின் வழங்க மறுத்து ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சட்டம், தற்போது பள்ளி மாணவிகளுக்கு மது ஊற்றிக்கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு துணைபோன பள்ளி நிர்வாகிகளுக்கு உடனடியாக ஜாமின் கிடைத்துள்ளது. சமூக வலைதளங்களில் பேசும்பொருளாக மாறி உள்ளது.

நீதி தேவதையின் கண்களை மறைத்திருந்த கருப்பு பணி அகற்றப்பட்டு, அதன் கைகளில் அரசியலமைப்பு சட்டப்புத்தகம் மாற்றப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் பல நீதிபதிகள் இன்னும் கண்களை திறக்கவில்லையோ என்று விமர்சிக்கப்படுகிறது. சட்டம் அனைவருக்கும் சமம் என்கிறபோது, பாலியல் குற்றவாளியை விட ஆன்மிகம் பேசுவதுதான் பெரிய குற்றமாக தமிழ்நாடு அரசும், காவல்துறையும், நீதிமன்றங்களும் கருதுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக கீழமை நீதிமன்ற நீதிபதிகள், அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் மீதான ஊழல் வழக்குகளில் இருந்து அவர்களை விடுவிக்கப்பட்ட விவகாரம், நீதித்துறை மீதான நம்பக்கத்தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.  பின்னர் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு குறித்து கடுமையாக விமர்சனம் செய்ததுடன், தமிழ்நாடு அரசின் காவல்துறை, லஞ்ச ஒழிப்பு துறையையும் பச்சோந்தி போல செயல்படுவதாக கடுமையாக சாடியிருந்தார். அதைத்தொடர்ந்து, தற்போதைய பல அமைச்சர்கள்மீதான கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து விட்டு, மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்டார். தற்போது அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்பட்டு வருகிறது.  இதன் காரணமாக,  கீழமை நீதிமன்ற நீதிபதிகள் மீதான நம்பக்கத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.

இதுபோன்ற சூழலில்தான்,  உடன்குடி சல்மா பள்ளியில், பள்ளி மாணவிகளுக்கு மதுக்குடிக்க வலியுறுத்தியும், பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதை மறைக்க முயன்ற பள்ளி நிர்வாகிகள் சையது மற்றும் சார்லஸ் ஸ்வீட்டி ஆகியோர் மீது போக்சோ வழக்கில் காவல்துறை வழக்கு பதிவு செய்து,  கைது செய்த நிலையில், அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உடனடி ஜாமின் வழங்கி உள்ளது. நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி உடன்குடி பள்ளியில் மாணவிகளை மது குடிக்க சொல்லி வற்புறுத்தி அத்துமீறியதாக உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து அவருக்கு உடந்தையாக இருந்ததாக பள்ளியின் முதல்வர் மற்றும் செயலாளரும்  கைது செய்யப்பட்டனர். கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்த போது பள்ளியின் செயலாளருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது. அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது தூத்துக்குடி மாவட்ட நிதிமன்றம், பாலியல் குற்றவாளிகளுக்கு உடடினயாக ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் சல்மா மெட்ரிகுலேஷன் என்ற தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உடன்குடி பகுதியைச் சேர்ந்த பொன்சிங் வேலை செய்து வந்தார். கடந்த மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க மாணவிகளை ஆசிரியர் பொன்சிங் அழைத்து சென்றுள்ளார். மறுநாள் போட்டி நடைபெறும் என சொல்லப்பட்டதால், இரவில் தூத்துக்குடியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியிருக்கிறார்கள். அப்போது உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங், மாணவிகள் சிலரிடம் மது குடிக்குமாறும் டபுள் மீனிங்கில் பேசி அத்துமீறியதாகவும் சொல்லப்படுகிறது. ஆசிரியரின் இந்த செயலால் மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோரிடம் இந்த தகவலை கூறியுள்ளனர். இதனால் ஆவேசம் அடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆசிரியரை வேலையை விட்டு தூக்கிவிட்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.

இதுதொடர்பாக பெற்றோர்கள்,  பள்ளி செயலாளர் மற்றும் தலைமை ஆசிரியை சம்பவத்தை மறைத்துள்ளதாகவும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தினர். மேலும் இதுதொடர்பாக துணை சூப்பிரண்டிடம் மாணவர்களின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். மேலும், மாணவிகளின் உறவினர்கள் சிலர் பள்ளி முன் உள்ள சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து பெற்றோர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்களிடம்  பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், பள்ளியின் முதல்வர் மற்றும் செயலாளர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து கலைந்து சென்றனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று இரவு உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கை போலீசார் கைது செய்தனர்.  மேலும் பொன்சிங் மீது திருச்செந்தூர் போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று அவருக்கு உடந்தையாக இருந்ததாக பள்ளியின் முதல்வர் சார்லஸ் சுவீட்லி மற்றும் பள்ளி செயலாளர் செய்யது அகமது ஆகியோர் மீதும் போக்சோ  வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.  தொடர்ந்து பள்ளி செயலாளர் செய்யது அகமதுவையும் போலீசார் கைது செய்தனர். பள்ளி செயலாளர் செய்யது அகமதுவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறினார். நெஞ்சை பிடித்துக்கொண்டு அப்படியே அமர்ந்ததால் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

இதை நாடகம் என்று அந்த பகுதி மக்கள் கூறிய நிலையில், போலீசார் பள்ளி நிர்வாகத்துக்கு ஆதரவாககே செயல்பட்டு வந்தனர். தற்போது, அவர்களுக்கு நீதிமன்றத்தில் ஜாமின் கிடைத்துள்ளது. இந்த விவகாரத்திலும் காவல்துறையும், தமிழ்நாடு அரசும் பள்ளி நிர்வாகத்துக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது.

ஏற்கனவே நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் உ செயல்பட்டு வரும் தூய யோவான் அரசு உதவி பெறும்  தனியார்ப் பள்ளியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில்,  இடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தல்  காரணமாக,  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதுபோல,  கல்லூரி மாணவியை மது விருந்துக்கு மாணவியை அழைத்த நெல்லை தூய சவேரியார் கல்லூரி பேராசிரியர்களில் ஒருவர் தலைமறைவான  நிலையில், மற்றொருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.  இவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பது இதுவரை வெளியிடப்படவில்லை.

அதுபோல கிருஷ்ணகிரி பள்ளியில் நடைபெற்ற பாலியல் கொடுமை, திருச்சி அருகே கல்லூரியில் நடைபெற்ற பாலியல் சேட்டை என தமிழ்நாட்டில் உள்பட பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள பள்ளி கல்லூரிகளி மதுபோதை கலாச்சாரம் ஊடுருவி உள்ள நிலையில் சமீப காலமாக பாலியல் தொல்லைகளும் அதிகரித்து வருகின்றன. வேலையே பயிரை மேய்வது போல, பள்ளி மாணாக்கர்களுக்கு குருவாக செயல்பட வேண்டிய ஆசிரியர்களே பள்ளி மாணவிகளை மேயத்தொடங்கி உள்ளனர். இதுபோன்ற பல சம்பவங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி  உள்ளது.

மாணவிகளுக்கு மதுகொடுத்து பாலியல் தொல்லை: கைது செய்யப்பட்ட உடன்குடி ‘சல்மா பள்ளி’ முதல்வர் மற்றும் செயலருக்கு உடனடி ‘நெஞ்சுவலி’……

பள்ளிகளில் பாலியல் தொல்லை அதிகரிப்பு: விழிப்புணர்வு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை….