வாஷிங்டன்

பிரபல பொருளாதார நிபுணரான கீதா கோபிநாத் சர்வதேச நாணய  நிதியத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகி உள்ளார்.

இண்டர்நேஷனல் மொனெடரி ஃபண்ட் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும்  சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக இந்திய வம்சாவளியினரான கீதா கோபிநாத் கடந்த 2018 ஆம் ஆண்டு  பதவி ஏற்றார்.  இவர் சர்வதேச நாணய நிதியத்தின் 11 ஆம் தலைவராகப் பதவி வகித்தார்.  இவர் இந்த பதவிக்கு வந்த முதல் இந்தியர் மற்ரும் பெண் ஆவார்.

கர்நாடக மாநிலம் மைசூருவில் பிறந்த கீதா கோபிநாத் இதற்கு முன்பு ஹார்வர்ட் பலகலைக்கழகத்தில் பேராசிரியாக பணி  புரிந்து வந்தார்.  இந்த பதவி வகிக்கும் 3 ஆம் பெண் என்னும் பெருமையும் இவருக்கு உண்டு.    இவர் நிதியத்துக்குத் தலைவராகப் பணி புரிய ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இவருக்கு அளித்த சிறப்பு விடுமுறை முடிவடைய உள்ளது.

இதையொட்டி கீதா கோபிநாத் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  வரும் ஜனவரி மாதம் அவர் மீண்டும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணி புரிய உள்ளார்.   இவரைச் சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிற்ஸ்டலினா கொரோனா தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றியதற்கு மிகவும் பாராட்டி உள்ளார்.