திருவனந்தபுரம்:

கேரளாவில் மழை தொடர்பாக விடுக்கப்பட்டிருந்த ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட் வாபஸ் பெறப்படுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை முடிந்த ஓரிரு நாளில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. அதுபோல தமிழக்ததிலும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையில், கேரளாவின் இடுக்கி உள்பட  மலப்புரம் மற்றும் திருச்சூர், எர்ணாகுளம், பாலக்காடு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்துக்கு மோக  கனமழை கொட்டி வருகிறது. இதையடுத்துக்கு அந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.

அத்துடன், கண்ணூர், காசர்கோடு, வயநாடு, கோழிக்கோடு, கோட்டயம், ஆலப்புழா, பத்தினம் திட்டா, கொல்லம் ஆகிய 8 மாவட்டங்களிலும் மக்கள் எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தது.

வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவும், மண் அரிப்பும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இடுக்கி, பத்தினம்திட்டா, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய பகுதிகளுக்கு எல்லோ அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.. இதனால் அப்பகுதியில் பேரிடர் மீட்புக்குழுவினர், வருவாய்த்துறை அதிகாரிகள் தயார் நிலையில் இருந்தனர்.

இந்த நிலையில், ரெட் அலர்ட்டை வாபஸ் பெறுவதாக இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது. கேரளாவல் கொட்டி வரும் கனமழை காரணமாக  மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.