சென்னை:
கொரோனா தொற்று நோய் சிகிச்சை நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் பல தனியார் மருத்துவமனைகளும் சிகிச்சை அளிக்க மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன.
இதையடுத்து, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணக் கொள்ளை அடிக்கப்படுவது தொடர்பான ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  இதுதொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இதையடுத்து, தமிழகஅரசு, தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் கட்டணம் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து தள்போது,  கொரோனா சிகிச்சை கட்டணம் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
மலைக்க வைக்கும் அளவில் காணப்படும் இநத  கொரோனா சிகிச்சை கட்டணம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கல்ம் என்பது குறித்து இந்திய மருத்துவக் கவுன்சிலின் தமிழக கிளை, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதில்,
சாதாரண நோயாளிக்கு 10 நாட்கள் சிகிச்சை கட்டணமாக சுமார் ரூ.2,31,820 வசூலிக்கப்படலாம்.
கொரோனா பாதிப்பு லேசாக இருப்பவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.23,182 வசூலிக்கலாம்.
 தீவிர சிகிச்சை பெரும் கொரோனா நோயாளிகளுக்கு 17 நாள்கள் கட்டணமாக ரூ.4,31,411 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள், தனிமைப்படுத்தப்படும் பணியாளர்களுக்கான கட்டணமாக ஒரு நாளைக்கு ரூ.9,600 வரை நிர்ணயிக்கலாம்.
மலைக்கவைக்கும் இந்த சிகிச்சை கட்டணம் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இந்த தொகை மிக அதிகமாக இருப்பதாக சமூகவலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன