டில்லி

டில்லியில் மருத்துவ அவசரச் சட்டத்தை மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

டில்லியில் காற்று மாசுப்பாடு கடுமையாகி வருகிறது.   தூசுகளும், அழுக்குகளும் காற்றில் அனுமதிக்கப்பட்டதைப் போல பல மடங்கு  உள்ளதாக பல ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.    சமீபத்தில் உச்ச நீதி மன்றம் இதை சுட்டிக் காட்டி பட்டாசுகள் வெடிக்கக் கூடாது எனவும் வெடித்தால் காற்று மேலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மாசு படும் எனவும் தெரிவித்திருந்தது.

இதையொட்டி இந்திய மருத்துவர் சங்கத் தலைவர் கே கே அகர்வால்,  “டில்லியில் இன்று முதல் மருத்துவ அவசரச் சட்டத்தை இந்த சங்கம் அறிவிக்கிறது.   அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட வேண்டும்.  மக்கள் வெளியில் நடுமாடுவதை அடியோடு தவிர்க்க வேண்டும்” என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.   மேலும் காற்று மிகவும் மாசு பட்டிருப்பதால் இந்த தகவலை அளிப்பதாகவும் கூறி உள்ளார்