டில்லி:

த்திய அரசு கொண்டு வர உள்ள புதிய மருத்துவ அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அடுத்த மாதம் 2ந்தேதி முதல் நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட இந்திய மருத்துவர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பாக இந்திய மருத்துவ கவுன்சில் செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பை கலைத்துவிட்டு, அதற்கு பதிலாக  தேசிய மருத்துவ ஆணையத்தை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு மசோதாவை சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

இந்த புதிய சட்டத்தில், ஹோமியோபதி, ஆயுர்வேதம் படித்தவர்கள், ஒரு ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்க்கலாம், டாக்டராக தொழில் செய்வதற்கு முன்பு, தேசிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பன உள்ளிட்ட சிபாரிசுகளை நிலைக்குழு பரிந்துரை செய்திருந்தது..

இதற்கு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று தலைநகர் டில்லியில் உள்ள   இந்திரா காந்தி மைதானத்தில், மகா பஞ்சாயத்து என்ற பெயரில்  ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்திற்கு நாடு முழுவதும் இருந்து  சுமார் 600 மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்தில், மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணையம் பற்றிய பாராளுமன்ற நிலைக்குழுவின் சிபாரிசுகளை எதிர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் பேசிய அகில இந்திய மருத்துவ சங்க தலைவர் ரவி வங்கேட்கர், நிலைக்குழுவின் இந்த சிபாரிசுகள் வஞ்சகமானவை  குற்றம் சாட்டினார்.  எனவே, இவற்றை கண்டித்து, நாடு முழுவதும் டாக்டர்களும், மருத்துவ மாணவர்களும் ஏப்ரல் 2–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக  கூறினார்.