கரூர்: பாலியல் தொல்லையால் சாகும் கடைசி பொண்ணு நானாதான் இருக்கணும் என உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு, கரூரில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பாலியல் தொல்லை தொடர்பான புகார்கள், தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே நீட் தேர்வு அச்சத்தால் பலர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், பாலியல் தொல்லை தொடர்பான தற்கொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. முதன்முதலாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் மீதான புகார் வெளியானதைத் தொடர்ந்து புற்றீசல் போல ஏராளமான பாலியல் புகார்கள் ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்சியாளர்கள் என பலர்மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் கோவையில் மாணவி ஒருவர் ஆசிரியரின் பாலியல் தொல்லை குறித்து கடிதம் எழுதி வைத்துவிட்ட தற்கொலை செய்த நிலையில், கோவையில் உள்ள அரசு கலைக்கல்லூரி ஆசிரியர் மீதும் புகார் கூறப்பட்டு, அவரும் கைது செய்யப்பட்டார். மேலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக மருத்துவர் ஒருவரும், பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை ஜிஎச் மருத்துவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டுஉள்ளனர்.
இந்த நிலையில், கரூர் அருகே 12-ஆம் வகுப்பு பயின்று வரும் 17 வயது பள்ளி மாணவி தற்கொலை. கொண்டுள்ளார். நேற்று மாலை பள்ளி முடித்து வீடு திரும்பிய நிலையில், தனது வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் ”பாலியல் துன்புறுத்தலால சாகும் கடைசி பொண்ணு நானாதான் இருக்கணும்..” என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை கொண்டுள்ளார்.

இதுகுறித்து தங்க ல்அறிந்த கரூர் அருகே உள்ள வெங்கமேடு காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவியின் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டது.
பள்ளி மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பெற்றோர்கள கூறி உள்ளனர். அவரது கடிதத்தில்,
“Sexual Harassment -ஆல சாகுற கடைசி பொண்ணு நானாதான் இருக்கணும். என்னை யாரு இந்த முடிவை எடுக்கவெச்சான்னு சொல்ல பயமா இருக்கு.
இந்த பூமியில வாழ ஆசைப்பட்டேன். இப்போ பாதியிலேயே போறேன்.
இன்னொரு ஜென்மத்துல இந்த உலகத்துல வாழ வாய்ப்பு கிடைச்சா நல்லா இருக்கும்.
பெருசாகி நிறைய பேருக்கு ஹெல்ப் பண்ணனும்னு ஆசை. ஆனா முடியாதில்ல.
I love you Amma, Chithappa, mani mama, ammu உங்க எல்லாரையும் எனக்கு ரொம்ப புடிக்கும்.
ஆனா நான் உங்ககிட்ட சொல்லாமப் போறேன். இனி எந்த ஒரு பொண்ணும் என்ன மாதிரி சாகக்கூடாது.
sorry. மச்சான் Sorry.”
இவ்வாறு அந்தகடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, பள்ளி மாணவி கடிதம் மற்றும் டைரி செல்போன் உள்ளிட்டவைகளை கைப்பறிய காவல்துறையினர் அதுகுறித்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அவர் படித்த தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர், மாணவர், தலைமையாசிரியர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவுசெய்துள்ளனர்.
[youtube-feed feed=1]