சென்னை,

ரபரப்பாக பேசப்பட்டு வரும் அனிருத் குறித்த ஆபாச வீடியோவில் இருப்பது நான் அல்ல என்று இசையமைப்பாளர் அனிருத் அறிவித்து உள்ளார்.

நேற்று முதல் சமூக வலைத் தளங்களில் அனிருத் வீடியோ என்ற பெயரில் ஒரு ஆபாச வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் ஒல்லியான ஆணும், பெண்ணும் இட்ம்பெற்றுள்ள ஆபாச காட்சி பதிவாகி உள்ளது.

அதில் காணப்படும் ஒல்லியான உடம்புக்காரர் அனிருத் என்று யாரோ கிளப்பிவிட்டுள்ளனர். மேலும், அவருடன் இணைந்திருப்பது தமிழக பிரபலம் ஒருவரின் மகள் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஆபாச வீடியோ வெகுவெகமாக சமூக வலைதளங்கள் மூலம் பரவி வருகிறது.

இதுகுறித்து, அனிருத் ஆதரவாளர்கள்,  அந்த வீடியோவில் இருப்பது அனிருத் இல்லை, பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், சிலர் கிண்டலாக, “ஆதியை காப்பாற்றி அனிருத் சாதனை,” என்றும், “நாலு எலும்ப வச்சிட்டு ஒல்லியா செகப்பா மட்ட மலாக்க கெடந்தா அது அனிருத்தா?” என்றும் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், “அந்த ஆபாச வீடியோவில் உள்ளது நான் அல்ல” என்று அனிருத் மறுப்பு தெரிவித்து உள்ளார்.