ராமேஸ்வரம்:

ன்றுமுதல் தனது அரசியல் பயணத்தை தொடங்கி உள்ள கமல், மக்களிடையே பேசும்போது, நான் இனிமேல் சினிமா நட்சத்திரம் கிடையாது. உங்கள் வீட்ட விளக்கு. அதை ஏற்றி பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்று கூறினார்.

அரசியலுக்கு வருவதாக அறிவித்த கமல் இன்று தனது அரசியல் கட்சியின் பெயர், கொடி, கொள்கைகள் குறித்து அறிவிக்க உள்ளார். இன்று மாலை மதுரையில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கமல் தனது கட்சி பெயர் குறித்து அறிவிக்கிறார்.

இந்நிலையில், கமல் ஏற்கனவே தெரிவித்தபடி இன்று காலை அப்துல் கலாம் வீட்டுக்கு சென்று, அவரது அண்ணனிடம் ஆசி பெற்று தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அதைத்தொடர்ந்து மீனவ பிரதிநிதிகளை சந்தித்து உரையாடியும், பின்னர் கலாமின் நினைவிடம் சென்று மரியாதை செலுத்திய கமல் மதுரை புறப்பட்டார்.

வரும் வழியில் ராமநாதபுரம் அரண்மனை வாசல் பகுதியில் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, ராமநாதபுரத்தில் எனக்கு ஒரு வீடு இருக்கு என இதுவரை நினைத்திருந்தேன். ஆனால் இங்கு பார்த்த பிறகு தான் தெரிகிறது, இங்கு இருக்கும் ஒவ்வொரு வீடும் என் வீடு என்று. “நான் சினிமா நட்சத்திரம் இல்லை. உங்கள் வீட்டு விளக்கு. இந்த விளக்கை பொத்தி பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. விளக்கை ஏற்றி வைக்க வேண்டியதும் உங்கள் பொறுப்புதான் என்று கூறினார்.

மேலும், தான் மக்கள் கூட்டத்தில் மிதந்து வரும்போது  யாருக்கும் எதுவும் பிரச்சினை ஏற்பட்டு விடுமோ என்று சற்று பயந்தேன். ஆனால் மேடையில் நிற்கும்போதுதான் உணர்கிறேன். இந்த வாய்ப்பை இனிமேலும் நழுவ விட வேண்டாமென்று என்று கூறிய கமல், இன்னும் பல்வேறு இடங்களில் போராடி நீந்த வேண்டி உள்ளது” எனத் தெரிவித்த கமல், இதே போன்ற கூட்டத்தையும், வரவேற்பையும் மதுரை கூட்டத்திலும் எதிர்பார்ப்பதாக கூறினார்.