சென்னை,

பிரபல தமிழ்பட இயக்குனர் வாசு மறைந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.

இந்த வதந்திக்கு முற்றுப் புள்ளி வைக்கும் பொருட்டு, பி.வாசு, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரபல இயக்குனர் வாசு உடல்நிலை குறித்து சமூகவலைதளங்களில் வதந்தி பரவிய நிலையில் தான் நலமுடன் இருப்பதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் வீடியோவில் பேசியிருப்பதாவது….

என்மீது அன்பு வைத்துள்ள அத்தனை உள்ளங்களுக்கும் என்னுடைய வணக்கம். என்னைப்பற்றிய வதந்தி குறித்து வாட்ஸ்அப்பில் எனக்கே வந்தது. நான் இன்றுதான் 6 கிலோ மீட்டர் நடந்துவிட்டு வந்தேன்.

நான் வந்தபிறகுதான் எனக்கு இந்த நியூஸ் வந்தது.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. சிரிப்பு வருது… பட் எத்தனை பேர் என்மீது அன்பு வைத்தி ருக்கிறார்கள்.. எத்தனை பேர் என்கிட்ட பேசினார்கள்… அவர்கள் அத்தனை பேருக்கும் நான் நன்றி சொல்கி றேன்… நான் நல்லா இருக்கேன்… ரொம்ப நல்லா இருக்கேன்… ஹெல்தியா இருக்கேன்… இந்த வருடம் 3 படம் டைரக்ட் செய்யப்போறேன்… உங்கள் எல்லாருக்கும் நன்றி….