
தெலுங்கின் வளர்ந்து வரும் இளம் நடிகர் நாக சௌரியா. இவர் தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கிய தியா படத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் ஆந்திர போலீசார், பண்ணை வீடு ஒன்றில் சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அந்த வீட்டில் சோதனையிட்டனர். அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 26 பேரை கைது செய்தனர். தொடர்ந்த விசாரணையில், அந்த வீடு நடிகர் நாக சௌரியாவுக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது.
போலீஸ் சூதாட்டம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். நாக சௌரியா கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
Patrikai.com official YouTube Channel