Resettlement_sinhalese2

ஜெனிவா:
லங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து, இடைக்கால வாய்மொழி ஆண்டறிக்கையை ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் சமர்ப்பித்த ஐநா மனித உரிமை கவுன்சில் ஆணையர் செய்த் ராத் அல் ஹூசேன், தொடரும் சட்டவிரோத கைதுகள், சித்ரவதைகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை உடனடியாகக் கவனித்து களைய வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளார்.

ஹுசேன்
ஹுசேன்

ஹுசேன் அளித்த இந்த ஒன்பது பக்க அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
“கடந்த பதினெட்டு மாதங்களில் இலங்கையின் புதிய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகளை ஆராய்ந்து ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மக்களுக்கு திரும்ப தருவது, பயங்கரவாத தடை தடுப்பு சட்டத்தை திருத்துவது, தடுப்பு காவலில் உள்ளோரை விடுதலை செய்வது போன்ற விசயங்களில் இலங்கை அரசு மேலும் கூடுதலான முன்னேற்றத்தை அடைந்திருக்க வேண்டும்.
மேலும், இலங்கையில் தொடரும் சட்டவிரோத கைதுகள், சித்ரவதை, பாலியல் வன்முறை போன்ற குற்றச்சாட்டுகளும் ராணுவ கண்காணிப்பு மற்றும் தொந்தரவு போன்றவை குறித்த குற்றச்சாட்டுகளும் விரைவாக கவனித்து களையப்பட வேண்டும்” இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.