இசைஞானி இளையராஜாவின் முதல் நேரடி சிம்போனி இசை நிகழ்ச்சி லண்டனில் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது.
9 இந்திய மொழி திரைப்படங்களில் இதுவரை 8500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா.
தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் தனது இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
தற்போது சிம்பொனி இசை நிகழ்ச்சியை முதல் முறையாக நேரடியாக நடத்த உள்ளார்.
லண்டனில் உள்ள எவெண்டிம் அப்போலோவில் 2025 மார்ச் 8ம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதற்கான டிக்கெட் விற்பனை டிசம்பர் 20ம் தேதி துவங்க உள்ள நிலையில் அதற்கான ப்ரீ-சேல்ஸ் டிசம்பர் 18ம் தேதி துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மற்றும் மேற்கத்திய இசைக்கு இடையிலான ஒரு அற்புதமான கலவையாக இந்த இசை நிகழ்ச்சி இருக்கும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பதை அடுத்து டிக்கெட் புக்கிங்கிற்காக ஆவலுடன் காத்துள்ளனர்.