1976-ல் வெளியான ‘அன்னக்கிளி’ படம் மூலமாக சினிமாவில் அறிமுகான இசைஞானி’ இளையராஜா இதுவரையில் 950க்கும் அதிகமான படங்களில் 4500க்கும் அதிகமான பாடல்களை தனது இசையால் மெருகேற்றியுள்ளார்.

இன்று தனது 78வது பிறந்த நாளை கொண்டாடும் இவருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் இவர் தனது பேத்திக்கு பியானோ வாசிக்க கற்றுக்கொடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

யுவன் ஷங்கர் ராஜா தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்த வீடியோவில் இளையராஜா யுவனின் மகளுக்கு பியானோவில் ‘ஹாப்பி பரத்டே’ ட்யூன் வாசிக்க கற்றுக்கொடுக்கிறார்.

[youtube-feed feed=1]