இளையராஜாவின் புகைப்படம் The Raaja of music is here என்ற வாசகத்துடன் டைம்ஸ் ஸ்கொயர் பில்போர்ட்டில் இடம்பெற்றது உலகம் முழுவதிலும் உள்ள இளையராஜா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நேற்றிரவு நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயர் பில்போர்ட்டில் இளையராஜாவின் புகைப்படம், The Raaja of music is here என்ற வாசகத்துடன் இடம்பெற்றது.

டைம்ஸ் ஸ்கொயர் பில்போர்டில் ஒருவரது புகைப்படம் அத்தனை எளிதில் இடம்பெறாது. அதுவொரு கௌரவம். ராஜாவுக்கு அது கிடைத்திருக்கிறது.

பிறப்பு முதல் இறப்புவரை தமிழ் மக்களை ஆகர்ஷித்து நிற்கும் மிகப்பெரிய ஆளுமை இளையராஜாவின் இசை என்றால் மிகையில்லை. அவரது இசை உலக அளவில் ஆஸ்கர் போன்ற அங்கீகாரத்தை பெறவில்லை என்ற வருத்தம் அவரது ரசிகர்களுக்கு உண்டு.