ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஐஐடி மாணவர்கள் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பாதிப்பு காரணமாக பல மாநிலங்களில் மீண்டும் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், , ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ஐஐடியில் பயிலும் மாணவர்கள் சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்டோர், அங்கு தங்கி படித்து வரும் அனைத்துமாணாக்கர்களுக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனா தொற்று பரவியதையடுத்து ஐஐடி வளாகத்தின் ஜி3 வளாகம் மைக்ரோ கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று பாதித்த மாணவர்களில் பெரும்பாலானோர் சண்டிகார், குஜராத், ஜெய்பூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து வந்தவர்கள் என்று கூறிப்படுகிறது.
[youtube-feed feed=1]