சென்னை: ‘அனைவருக்கும் ஐஐடி’ திட்டத்தின்கீழ் நடப்பாண்டு, அரசு பள்ளி மாணவர்கள் 28 பேர் சென்னை ஐஐடியில் இணையவழி படிப்புகளில் சேர உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தேர்வுபெற்றவர்களின் பெயர் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.

‘அனைவருக்கும் ஐஐடி’ என்ற திட்டத்தின் கீழ் சென்னை ஐஐடி பி.எஸ். தரவு அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் ஆகிய இணையவழி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்கள் 28 பேர் உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளது.
சென்னை ஐஐடி கடந்த 2022-ஆம் ஆண்டில் ‘அனைவருக்கும் ஐஐடி’ என்ற புதிய திட்டம். அறிமுகம் செய்தது. இதற்கென பிரத்யேக நுழைவுத் தோ்வை ஐஐடி நடத்துகிறது. அந்தத் தோ்வில் வெற்றி பெறுபவா்கள் இந்த இரு படிப்புகளை இணையவழியில் படிக்கலாம்.
இந்தப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்கள் அதிக அளவில் சோ்க்கை பெற தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான தோ்வை எதிர்கொள்ள மாணவ மாணவிகளுக்கு பயிற்சி வழங்குவதுடன், தேர்வு எழுதுவதற்கான கட்டணத்தை தமிழக அரசு செலுத்துகிறது.
இந்த தேர்வில் தோ்ச்சி பெறும் மாணவா்களின் பெற்றோா் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், அவா்களின் கல்வி கட்டணத்தில் 75 சதவீதத்தை சென்னை ஐஐடி வழங்குகிறது. மீதமுள்ள 25 சதவீதத்தை எஸ்.சி., எஸ்.டி. மாணவா்களாக இருப்பின்அவா்களுக்கான கட்டணத்தை தமிழக ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் செலுத்துகிறது. மற்ற பிரிவினா் அந்த 25 சதவீத கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். இணையவழி கற்றல் என்பதால் இதனுடன் சோ்த்து வேறு படிப்புகளையும் மாணவா்கள் தொடரலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 353 அரசுப் பள்ளி மாணவா்கள் பலன் பெற்றுள்ளனா். அந்த வகையில் நிகழாண்டில் இந்தப் படிப்புகளுக்கான தகுதித் தோ்வை 170 போ் எழுதினா். அதில் 28 போ் வெற்றி பெற்று, சென்னை ஐஐடியில் பி.எஸ். தரவு அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் படிப்புகளில் சேரவுள்ளனா்.
இதுகுறித்து, பள்ளி கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ், தனது எக்ஸ் தளத்தில், ‘முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தும் திட்டங்களின் துணையோடு அரசுப் பள்ளி மாணவா்கள் கல்வியில் உயரங்களை எட்டிப்பிடித்து சாதனை படைக்கிறாா்கள்’ என்று பதிவிட்டுள்ளாா்.
“தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தும் திட்டங்களின் துணையோடு அரசுப் பள்ளி மாணவச் செல்வங்கள் கல்வியில் உயரங்களை எட்டிப் பிடித்து, சாதனை படைக்கிறார்கள். அவ்வகையில் ‘அனைவருக்கும் ஐ.ஐ.டி திட்டத்தின்’ கீழ், நமது அரசுப் பள்ளி மாணவர்கள் 28 பேர் சென்னை ஐஐடியில் இணைந்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். அந்த மாணவச் செல்வங்களுக்கு அன்பு வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.
அந்த வகையில், 2025ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஜெஇஇ (JEE) முதன்மைத் தேர்வில் தகுதி பெற்ற பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 5 பேரும், சென்னையில் அரசுப் பள்ளி மாணவர் ஒருவரும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 8 பேரும், கள்ளக்குறிச்சி, சிவகங்கை மற்றும் வேலூர் மாவட்டங்களில் தலா 3 பேரும், மயிலாடுதுறையில் ஒருவரும், சேலம் மாவட்டத்தில் 2 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் 2 பேரும் என 28 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் 25 பேர் Data Science பாடப் பிரிவிலும், 3 பேர் எலெக்ட்ரானிக்ஸ் (ELectronic systems) பாடப் பிரிவில் சேர்ந்துள்ளனர்.
அதேபோல, சென்னை ஐஐடியில் பி.எஸ் எலெக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும் கல்வி அளிக்கப்படுகிறது. இதற்காக, குறைந்த கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
