விசாகப்பட்டினம்,
விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது.
முதலில் ஆடிய இந்திய அணி 404 ரன்களை குவித்தனர். 405 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  பேட்டை பிடித்த இங்கிலாந்து அணியினர் 158 ரன்னில் ஆல் அவுட் ஆயினர். இதன் காரணமாக 246 ரன் வித்தியாசத்தில் இந்தியா 2வது டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
 
இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 455 ரன்களும், இங்கிலாந்து 255 ரன்களும் எடுத்தன.
Cricket - India v England - Second Test cricket match
இங்கிலாந்து ‘பாலோ-ஆன்’ ஆன போதிலும் நிர்ப்பந்தம் செய்யாமல் 200 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை விளையாடியது.
மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்றும் நடந்தது. 162 ரன்னுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணிக்கு கடைசி விக்கெட் ஜோடியான ஜெயந்த் யாதவும், முகமது ஷமியும் அதிரடியாக விளையாடினர்.
Joe Root
உணவு இடைவேளைக்குள் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 63.1 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 405 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 158 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.