
புதுடெல்லி: கடந்த 1998 உலகக்கோப்பை போட்டியில் குரேஷிய அணியில் விளையாடிய மற்றும் அந்த அணியின் முன்னாள் மேலாளரான ஐகோர் ஸ்டைமக், இந்திய தேசிய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராகிறார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மே மாதம் 10ம் தேதி வெளியாகிறது.
அகில இந்திய கால்பந்து ஃபெடரேஷன், இவரின் பெயரை இந்த முக்கியப் பதவிக்குப் பரிந்துரை செய்துள்ளது. கடைசியாக தேர்வுசெய்யப்பட்ட 4 நபர்களுக்கான நேர்காணல் முடிந்த பிறகு, இவரே இந்தப் பணிக்கு மிகவும் பொருத்தமானவராய் இருப்பார் என்ற அடிப்படையில் இவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தற்போது 51 வயதாகும் ஐகோர் ஸ்டைமக், இந்திய கால்பந்து அணியின் பயற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு, முதன்முதலாக இந்தியக் கால்பந்து அணி பங்கேற்கவுள்ள சர்வதேச போட்டித் தொடர் தாய்லாந்து நாட்டில் நடக்கும் கிங்ஸ் கோப்பை.
இந்தப் போட்டித் தொடரில் இந்திய அணி, ஜுன் 5ம் தேதி நடைபெறவுள்ள தனது முதல் போட்டியில், கரிபீயன் தீவுகளைச் சேர்ந்த குராசோ என்ற ஒரு குட்டித் தீவு நாட்டுடன் மோதுகிறது.
[youtube-feed feed=1]