பாக்தாத்:
ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஆதரித்த 20 ஆயிரம் பேரை ஈராக் அரசு கைது செய்து சிறைகளில் அடைத்துள்ளது. இந்த வகையில் துருக்கி, ரஷ்யா நாடுகளை சேர்ந்த 1,400 பெண்கள் தண்டனை வழங்கப்படவுள்ளது. பாக்தாத் மகளிர் சிறையில் மட்டும் ரஷ்யாவை சேர்ந்த 57 பெண்களும், அவர்களதுர் 100 குழந்தைகளும் அடைபட்டுள்ளனர்.

இந்த வகையில் கைது செய்யப்பட்ட 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. த்றபோது ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 19 ரஷ்யப் பெண்களுக்கு பாக்தாத் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. அசர்பைஜான் நாட்டை சேர்ந்த 6 பெண்கள், தஜகிஸ்தானை சேர்ந்த 4 பெண்களுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel