டெல்லி: விவசாயிகள் மீது காரை ஏற்றிய நபரை ஏன் இன்னும் கைதுசெய்யவில்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள்,  நிகழ்ச்சி ஒன்றுக்கு வருகை தர இருந்த  மாநில துணை முதல்-மந்திரிக்கு எதிராக  கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த, சாலையில், திகுனியாவில் சாலையில்  மத்திய, மாநில பாஜக அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டு வந்தனர். அப்போது, பாஜகவுக்கு ஆதரவான பா.ஜனதா தொண்டர்களின் கார் அணிவகுப்பு ஒன்று அந்த வழியாக வந்தது. இதில் ஒரு எஸ்யுவி  கார் விவசாயிகள் மீது மோதிவிட்டு சென்றது.. இதில் 2 விவசாயிகள் பரிதாபாக உயிரிழந்தனர். இதனால், விவசாயிகள்  வன்முறையில் ஈடுபட்டனர்.  தொடர்ந்து வந்த பாஜகவினர் கார்களை தீ வைத்து எரித்தனர்.  இதனால் இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

விவசாயிகள் மீது வேண்டுமென்றே காரை மோதியதாகவும், அந்த காரில் மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.  அத்துடன் அவர் விவசாயிகள் மீது துப்பாக்கியால் சுட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த வன்முறையில் 4 விவசாயிகள், 4 ஊடகத்துறையினர் உள்பட மொத்தம் 9 பேர் பலியானதாக கூறப்படுகிறது. இந்த வன்முறையாக காரலணமாக, துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அவரும்  தனது பயணத்தை ரத்து செய்தார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார்.

மேலும், முன்னெச்சரிக்கைநடவடிக்கையாக லகிம்பூர் கேரி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் பல இடங்களில் இணைய சேவையும் துண்டிக்கப்பட்டு உள்ளது. சம்பவ இடத்தில் ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க சென்ற பிரியங்கா, அகிலேஷ் யாதவ் போன்ற அரசியல் கட்சியினர்  தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

லக்கிம்பூருக்குச் செல்லும் வழியில் ஹர்கான் என்னுமிடத்தில் காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி, தீபிந்தர் ஹுடா ஆகியோரைக் காவல்துறையினர் கைது செய்து சீதாப்பூரில் உள்ள விருந்தினர் இல்லத்தில் தடுப்புக் காவலில் வைத்தனர். சிறைவைக்கப்பட்ட அறையைப் பிரியங்கா கூட்டிப் பெருக்கிய காட்சி இணையத்தில் பரவியது/ சிறை வைத்ததைக் கண்டித்துப் பிரியங்கா காந்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் விவசாயிகள் மீது கார் மோதியதின் வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.  அந்த வீடியோவில் சாலையில் நிற்கும் விவசாயிகள் பின்புறம் வழியாக வேகமாக வரும் கார் அவர்கள் மீது ஏற்றிவிட்டு நிறுத்தாமல் செல்கிறது. தொடர்ச்சியாக இரண்டு கார்கள் அதேபோல செல்கின்றன. இந்த வீடியோவை டுவிட்டரில் பலரும் பகிர்ந்துவருகின்றனர். அந்த வீடியோ பார்ப்பவர்களைப் பதறச் செய்யும் வகையில் உள்ளது.

இந்த நிலையில், விவசாயிகள் மீது கார் ஏற்றிய நபரை இதுவரை ஏன் கைது செய்யவில்லை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், “ எந்த உத்தரவும் எப்.ஐ.ஆரும் இன்றி கடந்த 28 மணி நேரமாக உங்கள் அரசு (பிரதமர் மோடி) என்னை தடுப்புக்காவலில் வைத்துள்ளது. லகிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றிய நபரை இதுவரை ஏன் கைது செய்யவில்லை?” எனக்கேள்வி எழுப்பியுள்ளார்.