தெலங்கானா,
இந்து ஆலயங்களில் வேலை செய்யும் அர்ச்சகர்களை திருமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் சன்மானமும், ஒரு லட்சம் நிரந்த வைப்புநிதியும் வழங்கப்படும் என தெலுங்கானா அரசாங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தற்போதைய காலத்தில் பெண்கள், தங்களை திருமணம் செய்பவர்கள், டிப்டாப்பாக அழகாகவும், அதிகம் சம்பாதிப்பவர்வளாக இருக்க வேண்டும் என எண்ணுகிறார்கள். ஐடி ஊழியர்கள், அரசு ஊழியர்கள், பெரும் பணக்காரர்கள் போன்றவர்களையே நாடுகிறார்கள்.
மேலும், அதே அர்ச்சர்கள் சமூகத்தினரும், தங்களது பெண் பிள்ளைகளுக்கு அர்ச்சகர்களை மணம் செய்து வைக்க விரும்பாமல் மற்ற துறை மணமகனையே தேர்வு செய்துவருகிறார்கள்.
இதன் காரணமாக கோவில்களில் பணியாற்றி வரும் அர்ச்சர்களுக்கு பெண்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது.
ஆகவே, கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களின் திருமணம் நடைபெறும் வகையில், அதை ஊக்குவிக்கும் வகையில், மூன்று லட்ச ரூபாய் நிதி கொடுப்பதுடன், திருமண செலவுக்காக தம்பதியினருக்கு ஒரு லட்ச ரூபாய் பிக்சட் டெபாசிட் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெலுங்கான பிராமின் சம்க்ஷீமா பரிஷத்தின் தலைவர் கே வி ரமணாச்சாரி கூறியிருப்பதாவது,
தற்போது உள்ள பெண்கள் முன்புபோல இல்லை. பேராசையோடு மாப்பிள்ளைகள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள் கூட வேலை உறுதியாக இல்லாததால் கல்யாணம் நடக்காமல் இருக்கிறார்கள். சமூகத்தில் பெரிய மதிப்பு இல்லாததால் ஆலயங்களில் வேலை செய்யும் பிராமண அர்ச்சர்களுக்கு எல்லாம் பெண் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது என கூறியிருந்தார்.
இந்நிலையில்,கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு ரூ.4 லட்சம் உதவி அளிக்கப்படும் என தெலங்கானா அரசு அறிவித்துள்ளது.
இந்த கே வி ரமணாச்சாரி தெலுங்கானா முதலவரின் ஆலோசகராகவும் இருக்கிறார். ஆகவே அவரது ஆலோசனையின் பேரிலேயே தெலங்கான அரசு இந்த திட்டத்தை அறிவித்துள்ளது என கூறப்படுகிறது..