மது கூடாது என்றால் கள்ளச்சாராயம் பெருகும் என்று நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இன்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய கமல்ஹாசன் தெரிவித்ததாவது:

“மது இல்லாவிட்டால் கள்ளச்சாராயம் பெருகும்.  மது இல்லாமல் வாழ முடியாது என்ற நிலை ஏற்படுத்தப்பட்டு விட்டது. கல்வி தனியார்  வசம் இருக்கிறது. ஆனால் சாராயம் அரசு வசம் இருக்கிறது.

நீங்கள்தான் என் பேச்சு. தமிழகம்தான் என் மூச்சு.

நமக்கு அரசியல் எதற்கு என்று, நானும் தவறு செய்துவிட்டேன். ஆனால் இனியும் ஒதுங்கியிருக்கக் கூடாது. இதுதான் சரியான நேரம். மாணவர்களும் அரசியலில் ஈடுபட வேண்டும். உங்களைப்போல அடுத்த சந்ததியினரும் சிரமத்துக்கு ஆளாகக் கூடாது.

இலவச.. மானிய ஸ்கூட்டர் எதற்கு? நான் ஆட்சிக்கு வந்தால் ஸ்கூட்டர் கொடுக்க மாட்டேன். ஸ்கூட்டர் வாங்கும் அளவுக்கு பொருளாதாரத்தைப் பெருக்குவேன்.

மக்களது பிரச்சினைகளை புரியாத தீர்க்காத அரசு, ஓட்டைப் படகு போல மூழ்கும்.

சமைக்கும்போதே சாப்பிடுபவர்கள் சமைக்கக்கூடாது” என்று கமல் பேசினார்.