‘’தினமும் ரூ.700 கோடி ’ஹாட் ஹேஷ் ‘வேணுமா?   நாங்க சொல்றத கேளுங்க’’

ஊரடங்கைச் சாதாரண மக்கள் பொறுத்துக்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

ஆனால் அரசாங்கமும், மது உற்பத்தியாளர்களும் இனியும் அமைதி காக்கத் தயாராக இல்லை.

சில வட கிழக்கு மாநிலங்கள் ஏற்கனவே சரக்கு கடைகளைத் திறந்து விட்டன.

பல மாநிலங்களில் மது வருவாய், மொத்த வருமானத்தில்  30 % என்பதால், ஊரடங்கைக் காரணம் காட்டி-

மதுக்கடைகளை மூடி வைத்திருக்கத் தயாராக இல்லை.

இந்தியாவில் மது தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஆலை முதலாளிகள், ‘’ உடனடியாக மதுக்கடைகளைத் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.

சரக்கு கடைகள் மூலம் நாடு முழுவதும், மாநிலங்களுக்குத் தினமும் 700 கோடி ரூபாய் வருமானம் வந்ததாகக் குறிப்பிட்டுள்ள, மதுபான உற்பத்தியாளர்கள், ’அந்த பணம் கிடைத்தால் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு பிரயோஜனமாக  இருக்கும்?’’ என்று வினா எழுப்புகிறார்கள்.

மதுக்கடைகளைத் திறக்குமாறு மத்திய அரசுக்கு அவசர கடிதம் எழுதியுள்ள மது ஆலை  உரிமையாளர்கள்,’’ வீடு தோறும் மது பானம் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மது விற்பனை மூலம் கடந்த நிதி ஆண்டில், சில மாநிலங்களுக்குக் கிடைத்த வருமானத்தை அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

மூர்ச்சை அடையச்செய்யும் அந்த பட்டியல் உங்கள் பார்வைக்கு:

மகாராஷ்டிரம்: ரூ.24 ஆயிரம் கோடி.

உத்தரப்பிரதேசம்: ரூ. 26 ஆயிரம் கோடி.

தெலுங்கானா: ரூ.21 ஆயிரத்து 500 கோடி.

கர்நாடகம்: ரூ. 20 ஆயிரம் கோடி.

மே.வங்காளம்: ரூ. 11 ஆயிரத்து 674 கோடி.

ராஜஸ்தான்: ரூ.7 ஆயிரத்து 800 கோடி.

பஞ்சாப்:ரூ.5 ஆயிரத்து 600 கோடி.

இது தான் அந்த பட்டியல்.

கொரோனாவை கட்டுப்படுத்த மாநிலங்கள் ஏகப்பட்ட பணத்தை செலவழித்து விட்டு, பெரும் பொருளாதார நெருக்கடியை  எதிர் கொண்டிருப்பதால், ‘கடைகளைத் திறக்க வேண்டும்’’ என்பது, நாடு முழுவதும், செயல்படும் மதுபான தொழிற்சாலை அதிபர்கள் கோரிக்கை.

‘நீங்களும் பொழைக்கணும்..நாங்களும் பொழைக்கணும்’’ என்பதே, அவர்கள் சொல்லாமல் சொல்லும் சேதி.

– ஏழுமலை வெங்கடேசன்

.