சென்னை: ஆட்சியில் பங்கில்லை என்றால், திமுக தனித்துப் போட்டியிட வேண்டியதுதானே என கேள்வி எழுப்பியுள்ள தமிழக வெற்றி கழகம், தேர்தலில் தனித்துப் போட்டியிட முடியும் என்று திமுக அறிவிக்குமா என்று சவால் விடுத்துள்ளது.
இந்திய அரசியலமைப்பின் அடிப்படை விதியே, சம உரிமைதான். அவர்கள் பாஜகவை பாசிச கட்சி என்று சொல்கின்றனர். ஆனால், உண்மையில் பாசிசம் என்று பாடம் எடுக்கக் கூடிய அளவுக்கு திமுக தான் இருக்கிறது” என்று தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலா் கே.ஜி. அருண்ராஜ் கூறி உள்ளார்.

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பது பேசும்பொருளாகி வருகிறது. திமுக கூட்டணியும், அதிமுகபாஜக கூட்டணியிலும் ஆட்சியில் பங்கு வேண்டும் என கூட்டணி கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், அதை திமுக, அதிமுக மறுத்து வருகிறது. இதற்கிடையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் பலர், இந்த ஆட்சியில் பங்கு வேண்டும் என அழுத்தமாக தெரிவித்து வருகின்றனர். இதனால் கூட்டணியில் சலசலப்பு ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தேர்தலில் தனித்துப் போட்டியிட முடியும் என்று திமுக அறிவிக்குமா என்று தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலா் கே.ஜி. அருண்ராஜ் சவால் விடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அருண்ராஜ், “முதல்வர் ஸ்டாலினின் முதல்வர் நாற்காலியின் ஒரு கால் மட்டுமே திமுகவுடையது; மற்ற மூன்று கால்களும் கூட்டணிக் கட்சிகளுடையது. அப்படியிருக்கையில், கூட்டணிக் கட்சிகளை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி, அவர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்காமல் இருப்பது சமூக நீதிக்கு எதிரான செயல்.
இதிலிருந்தே, சமூக நீதியை திமுக எவ்வாறு பாதுகாக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. 130-க்கும் மேலான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றிருந்தாலும், ஒவ்வொரு தொகுதியிலும் கூட்டணிக் கட்சிகளின் பங்கும் உள்ளது. ஆட்சியில் பங்கு தர முடியாது என்றால், திமுக தனித்து போட்டியிடும் என்று சொல்ல முடியுமா? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசியவர், சேலத்தில் வருகிற 13 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்துக்கு வெறும் 5000 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளனர். திமுகவுக்கு மட்டும் வாராவாரம் எந்த பொதுக் கூட்டம் என்றாலும் அனுமதி அளிக்கின்றனர். ஒரு ஜனநாயக நாட்டில் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் சம வாய்ப்பு இருக்க வேண்டும். இந்திய அரசியலமைப்பின் அடிப்படை விதியே, சம உரிமைதான்.
அவர்கள் பாஜகவை பாசிச கட்சி என்று சொல்கின்றனர். ஆனால், உண்மையில் பாசிசம் என்று பாடம் எடுக்கக்கூடிய அளவுக்கு திமுக தான் இருக்கிறது”.
இவ்வாறு கூறினார்.
[youtube-feed feed=1]