உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்தால் பேரழிவு ஏற்படும் : அமெரிக்கா எச்சரிக்கை

Must read

வாஷிங்டன்

க்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்தால் அது அந்நாட்டுக்குப் பேரழிவாக இருக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்று ஓராண்டு முடிவடைந்துள்ளது.  இதையொட்டி ஜோ பைடன் வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர், “உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்தால் அது அந்நாட்டுக்குப் பேரழிவாக இருக்கும்.  ரஷ்ய பொருளாதாரத்துக்கு கடும் இழப்புக்கள் ஏற்படும்.

ஏற்கனவே உக்ரைனுக்கு அமெரிக்கா 600 மில்லியன் டாலர் மதிப்பிலான அதி நவீன பாதுகாப்பு உபகரணங்களை அனுப்பி உள்ளது.    எங்களது கூட்டாளிகளும் ரஷ்யாவுக்குப் பாடம் புகட்டத் தயாராக உள்ளனர்.  ரஷ்யா உக்ரைனுக்குள் மேலும் முன்னேறினால் ஏற்கனவே அறிவித்ததைப் போல் ரஷ்யாவுக்குப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும்.

சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்களை ரஷ்யா உக்ரைன் எல்லையில் குவித்து வைத்துள்ளது.  அந்த ரஷ்ய வீரர்கள் உக்ரைனுக்குள் சென்றால் அவர்கள் உடல் ரீதியான உயிரிழப்புக்களைச் சந்திப்பார்கள்.   மேலும் அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டாளி நாடுகளின் பொருளாதாரத் தடைகளையும் ரஷ்யா சந்திக்க நேரிடும்” என எச்சரித்துள்ளார்.

More articles

Latest article