ரஜினிகாந்தை முதல்வராக்க தவறினால் அவர் பிரதமராகி விடுவார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த திருமாவளவன் தெரிவித்ததாவது:
“நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை ஒரு அரசியல்வாதி என்ற முறையில் நான் வரவேற்கிறேன்.
தமிழ்நாட்டை தமிழர்தான் ஆளவேண்டும் என்கிர முழக்கங்கள் எல்லாம் இனி எடுபடாது. மொழி சார்ந்த கொள்கைகள் மட்டுமே போதும் என்பது இனி சரிவராது.
ரஜினிகாந்த் தமிழர் அல்ல.. அவர் மராட்டியர், கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்றெல்லாம் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கிறார். தமிழ்நாட்டை ஒரு தமிழர் ஆளவேண்டும் என்பதை விட ஒரு மனிதர் ஆளவேண்டும் என்பதே முக்கியம்.
ரஜினிகாந்தை தமிழக முதல்வராக்க தடை செய்தோம் என்றால், இந்த நாட்டின் பிரதமர் ஆகிவிடுவார். ஒரு மாநிலத்தை ஆள அவருக்கு தடை ஏற்படுத்தினால் அவரை இந்தியாவை ஆள வைத்து விடுவார்கள். தமிழக அரசு செயலிழந்து கிடக்கிரது. அதிமுகவின் இரு அணிகளும் ஆட்சியை தக்க வைக்க போராடி வருகின்ரன.
பிரதமர் மோடியின் மூன்றாண்டுகால ஆட்சியில் திட்டங்கள் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை, மாறாக அனைத்தும் கார்ப்ரேட் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது மத்திய அரசு. மத்திய மோடி அரசு மாட்டு வணிகத்தை கார்ப்பரேட் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மாட்டுக்கறிக்கான தடை இந்தியா முழுமையும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது
பாஜக தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பில்லை” என்று திருமாவளவன் தெரிவித்தார்.