சென்னை:
மிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்ற கூறி பரபரப்பை ஏற்படுத்திய  ரஜினி, தற்போது பொய் தகவலை தெரிவித்து இபாஸ் பெற்றுள்ள விவகாரம் சமூக வலைதளங்களில்கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில்,
 ரஜினி கட்சி ஆரமித்தால் 10 நாட்களில் அவர்தான் முதல்வர் என நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
தமிழகத்தில், மூத்த அரசியல் கட்சி தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அரசியல் வெற்றிடம் உள்ளதாக கூறி வந்த ரஜினி, எடப்பாடியார் ஆட்சியில் சிஸ்டம் சரியில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ரஜினியின் கருத்தை அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்த நிலையில்,  கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31ந்தேதி  கட்சி தொடங்குவதாக ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார்.
ஆனால்  ஆண்டுகள் கடந்துசென்றுள்ளதே, தவிர, ரஜினியின் அரசியல் குறித்த அறிவிப்பில் எந்தவித முன்னேற்ற மும் இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, மக்களிடையே எப்பொழுது எழுச்சி ஏற்படுகிறதோ, அப்பொழுது நான் கட்சி தொடங்குவேன் என கூறி, தான் ஒரு வெத்துவேட்டு என்பதை நிரூபித்து உள்ளார்.
இந்த நிலையில், செய்தியாளரை சந்தித்த நடிகர் எஸ்.வி.சேகர், “நடிகர் ரஜினி கட்சி ஆரமித்தால் 10 நாட்களில் அவர்தான் முதல்வர்” என தெரிவித்துள்ளார்.
காமெடி நடிகர் எஸ்.வி.சேகர், எப்போதும்போல ரஜினி விஷயத்திலும் காமெடி செய்துள்ளார் போலும்..