லண்டன்
பிரிட்டன் இளவரசர் வில்லியம் தனது குழந்திகள் ஓரின சேர்ககையாளர் ஆனால் தாம் அதை எதிர்க்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் டியூக் ஆஃப் கேம்பிரிட்ஜ் என அழைக்காடுபவர் ஆவார். இவர் மனைவி கேட் மிடில்டன். இவர்களுக்கு ஜார்ஜ் 5, லூயிஸ் 1 என இரு மகன்களும் சார்லட் 4 என்னும் மகளும் உள்ளனர். மகிழ்ச்சியான குடும்பமாக இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இளவரசர் வில்லியம் பல சமூக சேவை நிகழ்வுகளில் கலந்துக் கொள்கிறார். அவ்வகையில் ஆல்பர்ட் கென்னடி டிரஸ்ட் என்னும்நிறுவனம் சார்பில் ஓரின சேர்க்கையாளர் குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டார். இந்த நிறுவனம் பல ஓரின சேர்க்கையாளர்களுக்கு உதவி புரிந்து வருகிறது. இந்த நிகழ்வில் அவர்களும் கலந்துக் கொண்டனர்.
அவர்களில் ஒருவர் இளவரசர் வில்லியம் தனது குழந்தைகளுக்கு ஓரின சேர்க்கை விருப்பம் இருந்தால் அவர் அதை எப்படி எதிர்கொள்வார் என கேள்வி எழுப்பினார். அதற்கு வில்லியம், “என் குழந்தைகள் ஓரின் சேர்க்கையாளர்கள் ஆனால் அதை எதிர்க்க மாட்டேன். அவர்களுக்கு நான் முழு ஆதரவு அளிப்பேன்.
இந்த செய்தி நிச்சயம் என்னை வருத்தப்பட வைக்கும். அது அவர்கள் ஓரின சேர்க்கையாளர்கள் என்பதால் அல்ல. மற்றவர்கள் அவரகளிடம் எப்படி நடந்துக் கொள்வார்கள் என்பதைப் பற்றியும் இதனால் குழந்தைகள் மீது திணிக்கப்படும் அழுத்தம் குறித்தும் நான் வருத்தப் படுவேன்” என தெரிவித்தார்.