சென்னை,
நாட்டில் தற்போதுள்ள பணப்பிரச்சினை இன்னும் நீடித்தால் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவோம் என அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
“பணப்பிரச்னை தொடர்ந்தால் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும்” என்று அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த நவம்பர் 8ம் தேதி இரவு முதல் 500, 1000 நோட்டுகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது மத்திய அரசு. இந்த திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கடும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் பல இடங்களில் வங்கிகளை அடித்து நொறுக்கி வருகினற்னர். மேலும் வங்கிகளை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக வங்கி ஊழியர்களும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
இதன் காரணமாக வங்கி ஊழியர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உருவாகி உள்ளதாக வங்கி ஊழியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் நிருபர்களிடம் கூறியதாவது,
வங்கிகளில் இருந்து பணம் எடுக்க மத்திய அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் டிசம்பர் 30ம் தேதியுடன் முடிவடையும் என நம்புகிறோம். அடுத்த ஆண்டு முதல் வாரத்துக்கு 24,000 எடுக்க முடியும் என்ற உச்சவரம்பு தளர்த்தப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
காரணம், வங்கிகளுக்கு போதுமான பணம் ரிசர்வ் வங்கிகளில் இருந்து தரப்படுவது இல்லை. தற்போதே மத்திய அரசு அறிவித்தபடி 24,000 ரூபாய் கொடுக்க முடியாத சூழலே நீடித்து வருகிறது.
பணப்பற்றாக்குறையால் பெரும்பாலான ஏடிஎம்கள் இயங்காமல் மூடப்பட்டே உள்ளது. தனியார் வங்கிகளுக்கு மட்டும் கூடுதல் பணத்தை ரிசர்வ் வங்கி அளித்து வருகிறது.
அரசுடமை வங்கிகளுக்கு தேவையான பணம் கொடுக்கப்படுவதில்லை. ஆனால், அரசுடமை வங்கிகளில்தான் சாமானிய மக்களின் வங்கி கணக்குகள் அதிகளவில் உள்ளது. அவர்களுக்கு கொடுக்க தேவையான பணம் தரப்படுவதில்லை.
எந்தெந்த வங்கிகளுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்படுகிறது என்ற விவரத்தை ரிசர்வ் வங்கி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
மேலும், வருமான வரித்துறையினர் நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தி கோடிக்கணக்கான புதிய ரூபாய் நோட்டுக்களை கைப்பற்றி உள்ளனர். இந்த பணம் அவர்களுக்கு எப்படி கிடைத்தது. எந்த வங்கிகளில் இருந்து சென்றது என்பதை சிபிஐ விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், தவறு செய்த வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான பணத்தை வழங்குவதற்கு ஏற்றார் போல் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்றார்.
பொதுமக்கள் படும் அவதியை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வருகிற 28ந் தேதி அனைத்து நகரங்களிலும் அடையாள போராட்டம் நடத்தப்படும்.
29ந் தேதி நிதி அமைச்சகத்துக்கு தொழிற்சங்கங்கள் சார்பில் கடிதம் அனுப்பப்பும் போராட்டம் நடத்தப்படும்.
20176 ஜனவரி 2ந் தேதி கோரிக்கைகள் அடங்கிய அட்டையை சட்டையில் அணிந்து வங்கி ஊழியர்கள் பணியாற்றுவார்கள்.
ஜனவரி 3-ந் தேதி தர்ணா போராட்டம் நடத்தப்படும்.
மேலும் பணப்பிரச்சினைகள் தொடர்ந்தால் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.