டில்லி
வரும் மக்களவை தேர்தலில் மோடி வெற்றி பெற்றால் இந்தியாவும் சீன வழியில் இனி தேர்தலை நடத்தாது என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெகலாத் கூறி உள்ளார்.
ராஜஸ்தான் மாநில முதல்வரான அசோக் கெகலாத் ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் ஆவார். இவர் சுமார் 50 வருடங்களாக காங்கிரஸ் கட்சியில் பல பதவிகலில் உள்ளார். தற்போது நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிர பிரசாரம் மெற்கொண்டு வருகிறார். அவர் தனது பிரசாரங்களில் மோடியை கடுமையாக தாக்கி வருகிறார்.
அசோக் கெகலாத், “மோடி தேர்தலுக்காக எதையும் செய்ய தயங்க மாட்டார். அவர் பாகிஸ்தானில் போர் தொடுப்பது மூலம் கூட தேர்தலில் வெற்றி பெற முயல்வார் என மக்கள் எண்ணுகின்றனர். இது நல்லதல்ல. மோடி என்பவர் தேர்தலில் வெற்றி பெற எந்த எல்லைக்கும் செல்வார் என்பது தற்போதுநாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிந்துள்ளது. அவர் மனதில் என்ன உள்ளது என்பது அமித்ஷா ஒருவருக்கு மட்டுமே தெரியும்.
மோடி ஒரு நல்ல நடிகரும் கூட. அவர் பாலிவுட்டில் இருந்திருந்தால் அகில் இண்டிய அல்லது அகில உலகப் புகழ் பெற்றிருப்பார். அவருடைய நடிப்பு, பேச்சு மற்றும் செய்கை அத்தகையது ஆகும். ஆனால் நாட்டு மக்கள் உண்மையையும் பொய்யையும் பாகுபடுத்தி பார்க்க தெரிந்துக் கொண்டு விட்டனர். அதனால் அவருடைய நடிப்பு இனியும் மக்கள் நம்ப மாட்டார்கள்.
இந்த தேர்தலில் மோடி வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானால் இனி தேர்தல் என்பதே நடக்காது. அவர் ரஷ்யா மற்றும் சீனாவில் உள்ளது போல ஒரே கட்சி மட்டுமே ஆளும். அதன் பிறகு தேர்தல் நடந்தாலும் அல்லது நடக்கவில்லை என்றாலும் மற்ற எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலை உண்டகும். ஜனநாயகத்தை விரும்பும் மக்கள் நிச்சயம் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதை விரும்ப மாட்டார்கள்” என கூறி உள்ளார்.