பெங்களூரு :
மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டில் ஜனநாயகம் அழிந்து, சர்வாதிகார ஆட்சிதான் நடைபெறும் என்று முன்னாள் மாநில முதல்வர சித்தராமையா கூறினார்.
கர்நாடக மாநிலத்தில் ஏற்கனவே முதல் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், 2வது கட்ட தேர்தல் 2-வது கட்ட தேர்தல் தார்வார், பல்லாரி உள்பட மீதமுள்ள 14 தொகுதிகளில் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது.
அங்கு நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் சித்தராமையா நாட்டில் பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் பழங்குடியின மக்கள் நிம்மதியாக வாழவில்லை. பசு பாதுகாப்பு என்ற பெயரில் சிறுபான்மையின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. விவசாயிகள் கண்ணீர் விடுகிறார்கள். நான் 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். மோடியை போல் பொய் பேசும் பிரதமரை நான் பார்த்தது இல்லை என்று குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசியவர், மோடி மீண்டும் பிரதமரானால் நாடு என்ன கதி ஆகும் என எனக்குள் பயம் ஏற்பட்டுள்ள தாக கூறியவர், நாட்டின் ஜனநாயகம் அழிந்துவிடும் என்றும், நாட்டில் சர்வாதிகார ஆட்சியைத்தான் மோடி நடத்துவார் என்று கூறினார்.
மேலும், நான் 5 ஆண்டுகள் மாநில முதல்வராக இருந்துள்ளேன்… மாநிலத்தில் எத்தனை பணிகளை செய்துள்ளேன் என்பது குறித்த விவரங்களை வழங்க தயாராக உள்ளேன். ஆனால், மோடி தனது பணிகள் குறித்து விவரங்களை வழங்க தயாரா? என்றும் கேள்வி எழுப்பினார்-
இவ்வாறு சித்தராமையா பேசினார்.