(கருணாநிதியுடன் அழகிரி சந்திப்பு – பைல் படம்)

சென்னை:

அரசியல் ஒரு சாக்கடை என்று கடந்த பிப்ரவரி மாதம் பேசிய மு.க.அழகிரி, தற்போது கருணாநிதி அழைத்தால் கட்சி பணியாற்றுவேன் என்று கூறி உள்ளார்.

டல்நலமில்லாமல் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார் கருணாநிதி. அவருக்கு பேச்சுப் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திமுக தலைவர்  கருணாநிதியை, அவரது மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி சென்னை கோபாலபுரத்தில்தனது குடும்பத்தினருடன் சந்தித்து ஆசி பெற்றார். இது திமுக வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில்  செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, தனது பேரன் பிறந்ததினத்தை ஒட்டி தலைவரின் ஆசியை பெற குடும்பத்துடன் வந்ததாக தெரிவித்தார்.

மேலும், தலைவர் தலைவர் கருணாநிதி  நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் விரைவில் பூரண குணம் அடைவார் என்றும் கூறினார்.

அப்போது செய்தியாளர்கள் அவரிடம் மீண்டும் எப்போது  கட்சி பணிக்கு வருவீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அழகிரி, திமுக தலைவர் கருணாநிதி அழைத்தால் மீண்டும் கட்சியில் இணைந்து பணியாற்றுவேன் என்று கூறினார்.

இதே மு.க.அழகிரிதான் கடந்த பிப்ரவரி மாதம் விருதுநகரில் நடைபெற்ற அவரது ஆதரவாளர் திருமண நிகழ்ச்சியில், “அரசியல் ஒரு சாக்கடை.. இதில் யார் வந்தால் என்ன” என காட்டமாக கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.