நெட்டிசன்:

ரவி சுந்தரம் (Ravi Sundaram) அவர்களின் முகநூல் பதிவு:

நம் (இந்திய)  நாட்டு கிரிமினல் சட்டங்கள் பெரும்பாலும் இங்கிலாந்து அரசின்சட்ட திட்டங்களை காப்பியடித்தே நிறுவப்பட்டன. ஆனால் அதை நாம் எப்படி புரிந்து கொண்டு செயல்படுத்த முனைகிறோம் என்பதில் இருக்கு நாம ஓரளவு நல்லா இருப்பதும் உருபடாம போவதற்குமான சூட்சுமம்.

இன்று ஜெயா வின் சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக அரசின் மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் ஏமாற்றமாக உள்ளது.

இங்கிலாந்தில் இருக்கும் ஒரு முக்கியமான குற்றவியல் சட்டம் “குற்றத்தில் சம்பாதித்த செல்வங்கள் குற்றம் நிருபிக்க பட்டால் அவை அரசின் வசம் வந்து சேரும்” என்பதேயாகும். குற்றவாளிகள் அதை அனுபவிக்க முடியாது.

குற்றவாளி வழக்கு நடக்கும் போதே இறந்துவிட்டாலும் அந்த குற்றம் நிருபிக்க பட்டால் இறந்தவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவரது குற்ற பின்னணியில் சேர்த்த சொத்து நாட்டுடமையாக்க பட்டுவிடும்.

நம்ம ஆளுங்க வசதியாக இதை கை கழுவி விட்டார்களா? இல்லையென்றால் ஜெயா வின் ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் குற்றபின்னனியில்தான் சேர்க்கப் பட்டவை என்று அறிவித்து நாட்டுடமையாக்கப் பட்டிருக்க வேண்டும்.

ஆனால் நடப்பது என்ன ? கொடநாடு எஸ்டேட் மற்றும் நகரில் பல கட்டிடங்கள் ஜெயா வின் வாரிசு என்று கூறிக் கொள்ளும் தீபக் மற்றும் தீபா போன்றோர் அனுபவிக்க வசதியாக இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. இது நியாயமா?

திருடியவன் இறந்துவிட்டால் அதை அவனது வாரிசுகள் அனுபவிக்கலாம் என்பது அவனது குற்றசெயலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு செய்யப்படும் அநீதி… இதற்கான சட்டம் இல்லை யென்றால் தேவையான சட்டம் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

மத்திய “நேர்மை ” அரசு செய்யுமா ??