பிரிஸ்பேன்: விராத் கோலி இல்லாமல், இந்திய அணி டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலியாவை வீழ்த்திவிட்டால், அந்த வெற்றியானது ஓராண்டிற்கு கொண்டாடத் தகுதியானது என்று பேசியுள்ளார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மொத்தம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் போட்டியுடன் நாடு திரும்புகிறார் விராத் கோலி.
இதுதொடர்பாக பேசியுள்ள கிளார்க், “கோலி நாடு திரும்புவதால், இந்திய அணிக்கு, கேப்டன்சி மற்றும் பேட்டிங்கில் கடும் பாதிப்பு ஏற்படலாம். அதேசமயம், கோலியின் இடத்தில் கேஎல் ராகுல் களமிறங்கினால் அவர் நிலைமையை ஈடுசெய்யலாம். அதேசமயம், கோலியின் இடத்தை முழுவதும் பூர்த்திசெய்வது மிகக் கடினம்.
ராஹானேவின் கேப்டன் பணியும் நன்றாக இருக்கும். அவர் நன்றாகவும் ஆடுவார். தனக்கு கிடைத்த வாய்ப்பை, சிறப்பாக செயல்பட்டு நிரூபிப்பதற்கு அவர் முயற்சிக்கலாம்.
இறுதியாக, விராத் கோலி இல்லாமல், இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றால், அது நிச்சயம், ஒரு ஆண்டிற்கு கொண்டாடப்பட வேண்டியதாகும்” என்றுள்ளார் கிளார்க்.