சென்னை:
தமிழக சட்டசபை கூட்டத்தொடர்ந்து இன்று கவர்னர் பன்வாரிலால் உரையுடன் இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் மற்றும், ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றிபெற்ற டிடிவி தினகரன் மற்றும் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் போன்ற பரபரப்பான சூழ்நிலையில் இன்று சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்குகிறது.
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்று சூசமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது சட்டமன்றத்தில் காங் எம்எல்ஏக்கள் எதிர்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்,
தமிழக அரசுக்கு எதிராக தி.மு.க. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால், அதற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்றார்.மேலும், நடந்து வரும் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால், ஏறக்குறைய 2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பயிற்சி இல்லா டிரைவர்கள் மூலம் இயக்கப்பட்ட பஸ்கள் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. எனவே இதுதொடர்பான அழுத்தமாக சட்டசபையில் குரல் கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
2018: The year of the first “legislative session” starting tomorrow!