சென்னை:
மத்தியில் காங்கிரஸ்அரசு அமைந்தால் தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு கிடையாது காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சரும், தேர்தல் அறிக்கை குழு தலைவருமான ப.சிதம்பரம் டிவிட் செய்துள்ளார்.
தமிழக நாடாளுமன்ற தேர்தல் பிரசாரங்களில் தமிழகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நீட் தேர்வு முக்கிய இடம் பிடித்துள்ளது. இதுகுறித்து, தமிழகத்தில் உள்ள திமுக, அதிமுக போன்ற அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் அறிவித்து உள்ளன.
அதே வேளையில், தேசிய கட்சிகளில், காங்கிரஸ் கட்சி நீட் தேர்வு மாநில அரசின் விருப்பம் என்றும், நாங்கள் நீட்டை திணிக்க மாட்டோம் என்று அறிவித்து உள்ளது. ஆனால், பாஜகவோ, நீட் தேர்வு தொடரும் ரத்து செய்ய முடியாது என்று கூறி உள்ளது.
தமிழக தேர்தல் களத்தில் நீட் தேர்வு முக்கிய இடம்பிடித்துளள நிலையில், பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அரசு அமைந்தால் ‘நீட்’ தேர்வு கிடையாது என முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் டிவிட் பதிவிட்டுள்ளது. அதில்,
மாநில மக்களின் விருப்பத்தையும் உரிமைகளையும் மதிக்கும் மத்திய அரசு வேண்டுமா? அல்லது தன் முடிவை மாநிலங்கள் மீது திணிக்கும் மத்திய அரசு வேண்டுமா?
காங்கிரஸ் அரசு அமைந்தால் ‘நீட்’ தேர்வு கிடையாது. பாஜக அரசு அமைந்தால் ‘நீட’ தேர்வு தொடர்ந்து இருக்கும். இனி சரியான முடிவு எடுக்க வேண்டிய நாள் ஏப்ரல் 18
‘நீட்’ தேர்வு பற்றி இரண்டு அணிகளின் நிலைப்பாடுகள் தெளிவாகத் தெரிந்து விட்டன. யாருக்கு வாக்களிப்பது என்று மாணவர்கள், பெற்றோர்கள் முடிவு எடுப்பது எளிதாகிவிட்டது
என்று கூறி உள்ளார்.